ரமேஷ் சோமசுந்தரம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரமேஷ் சோமசுந்தரம் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 04-Mar-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 166 |
புள்ளி | : 14 |
நான் யார் என்று அறிய முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு மடையன்...
மாச்சரியங்கள் மூழ்கடிக்க
---ஆச்சர்யங்கள் முளைக்கிறது
தாத்பரியங்கள் அறியாமலேயே
----சாத்வீகம் சாணக்கியமாகிறது!
நட்பேந்திய நெஞ்சுக்குள்
---நெருஞ்சியொன்று தைக்குது
தையலின் தயவுகளில்
---மையலாகிறது மனது!
மகராலயப் பேரலைகள்
---மதர்த்த நினைவிலடிக்குது
மதுரத் தேனோடைகள்
---எதார்த்தமாய் பாய்கிறது!
வங்கண வசியங்களில்
---பிரம்மச்சரியம் வழுவுகிறது
இங்ஙனம் வாழுங்கால்
---வாமனமும் வான்தொடுது!
பங்கயம் இதழ்மலர்ந்து
---பாயிரம் படிக்குது
பந்தமும் கொண்டாடிட
---பரிசமிட துடிக்குது!
எங்ஙனம் மறைத்தாலும்
---எனதாசை வெடிக்குது
வசந்த அழைப்புகளில்
---என்மனம் சிரிக்குது!
முடிச்சுகள் நிறைந்த வாழ்க்கையடா!
*** முயற்சிகள் நிறைந்த வாழ்க்கையடா!
தடுப்புகள் தாண்டி வந்துவிட்டால்
*** தயாராய் இருக்குது கோட்டையடா!
ஆழங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** அர்த்தங்கள் பொதிந்த வாழ்க்கையடா!
காலங்கள் வரும்வரை காத்திருந்தால்
*** கனிகள் உதிர்க்கும் தோட்டமடா!
கர்மங்கள் தொலையும் வாழ்க்கையடா!
*** கஷ்டங்கள் சூழும் வாழ்க்கையடா!
தர்மங்கள் எதுவெனத் தெரிந்துகொண்டால்
*** தாகம் தணிக்கும் தீர்த்தமடா!
வருத்தங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
*** வலிகள் மிகுந்த வாழ்க்கையடா!
திருத்தங்கள் உள்ளே செய்துகொண்டால்
*** திருப்பங்கள் காட்டும் வாழ்க்கையடா!
குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையடா!
***
மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா
அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!
அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!
கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!
கள்ளகபடமில்லா
காயம் பட
மனதுக்கு,
கத்தி தொட
தேவையில்லை...
காதல் தொட்ட
மனதின்,
காயம் இன்னும்
ஆறவில்லை...
அழியா
சின்னமாய்,
இதய கல்வெட்டில்
முதல் காதல்...
முன்குறிப்பு: என் மனைவி கொஞ்சம் முன்கோபி... அவளுக்காக எழுதிய அன்பான அட்வைஸ் இது!
ஆத்திரப்படாதே!
அன்பே ஆத்திரப்படாதே!
அன்றாடம் ஆக்ஸிடெண்டுகள்
ஒன்றிறென்டு ஏற்படக்கூடும்
ஆத்திரப்படாதே!
அன்பாய் பெற்றெடுத்த
ஐந்து வயது அல்வா துண்டு
அப்போஇப்போ சிறுகுறும்பு
செஞ்சுத்தான் விளையாடும்
ஆத்திரப்படாதே!
அறிவுஜீவி அப்துல் கலாம்கூட
ஐந்து வயதில் இப்படித்தான்
அடம்பிடித்து அழுதிருப்பார்
ஆத்திரப்படாதே!
ஆபீஸுக்கு போகும்
அவசரத்தில் உன் கணவன்
அங்கும்இங்கும் எதையேனும்
அழுக்குபடுத்தி செல்லக்கூடும்
ஆத்திரப்படாதே!
அன்னிய மக்கள்
அவர்தம் அறியாமையால்
ஏதோ ஒன்றிரண்டு
என் நெஞ்சைத் தொட்டு
நினைவில் நின்று
சில சமயம் சிரமபடுத்தி
பல சமயம் பரவசமூட்டி
என் வாழ்வின் வசந்தமாய்,
இருளின் வெளிச்சமாய்... நீ.
நிம்மதியேது...
நித்தம் உன் ஞாபகம் நெஞ்சை உலுக்கும் போது!
விடிந்து விடிவெள்ளி வரும்முன் வந்தது... உன் நினைவு!