balachandarmunisamy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : balachandarmunisamy |
இடம் | : puducherry |
பிறந்த தேதி | : 03-Feb-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-May-2012 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 7 |
கவிதை எழுத முயற்சித்துக் கொண்டிருப்பவன்.
இருளின் துவாரங்களை
விழித்துப் பார்க்கிறேன்
பொருளற்ற மௌனம்
என் சொற்களை களவாட
ஒளியற்ற வெளியில்
என் உடல் தனித்திருக்கிறது..
சுவாசத்தின் ஏற்ற இறக்கங்களை
கணம் கணம் உணர்கிறேன்..
வியர்வை படிந்த உடலில் காற்று நுழைய
சில்லென தேகம் உறைகிறது..
தொலைவில் யாரோ ஒருவரின் காலடி ஓசை
விட்டு விட்டு நெருங்கி ஒலிக்கின்றது..
என் முன்னறை கதவைத் தட்டிய பின்,
விழிப்படைந்து எழுகையில்
ஓசை மெல்ல மெல்ல அமிழ்கிறது..
வியர்வை உடல் பரவ நழுவி ஒழுக
மனதில் பயம் பரந்து விரிகிறது..
ஒப்பனையாக தைரியத்தை பூசிக்கொண்டு
எழுந்து கதவைத் திறக்க முயல எதிரே
இருள் வெளியில் ஓர் நிழலுருவம்
எத்துணை வருடங்கள் ஆனாலும் உம்மை மறந்திடலாகுமா
அஞ்சாத ஆளுமையே இனி வருபவர் உமக்கு நிகராகுமா
அலுப்பறியா அரியாசனத்தில்அமர்ந்த அரிமா
நீவீர் அமரர் ஆனாலும் இப்புவி உம்மை மறுக்குமா
நல்லவர் தீயவர் என ஆராய நெஞ்சம் தான் உறுத்துமா
உறுத்தினாலும் எங்களால் தான் என்பதை மறுக்க முடியுமா
திறமைகளின் கூடாரம் பன்முகவித்தகியே உம்மை வெறுக்கலாகுமா
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்கிற குரலை எம் செவி கேட்குமா
அம்மா....
எனக்காய் ஒரு கவிதையென
ஏங்கி கேட்டாள்
ஏக்கம்தான் எனக்கும் கவிதை
கேட்ட கவிதையின்
ஏக்கம் தீர்க்க
உவமை சொல்ல
ஒன்றும் இல்லை
அவளுக்கு நிகராய்
வர்ணிக்க வார்த்தை
வையகத்தில் இல்லை
புது மொழி
புவியில் வேண்டும்
காதலி அவளை
கவிபாட
தவித்து
களைத்து
கண் மூட
தெரிந்தது
அவள் முகம்
தெரிந்த
சிறந்த
உயர்ந்த
கவிதை
இதுவென
அவள் புகை படம் அனுப்பினேன்
எந்தையும் தாயுமாய் தாயின் உறவுகளாய்
பகுதியில் வந்த பகுத்தறிவாளர் நீங்கள்
தியாகத்தின் உருவமல்லவே நீங்கள்
உருவத்தின் உருவகங்கள்
அர்ச்சனை செய்வதிலும் வல்லவர்கள்
சிறந்த வார்ப்புகல் தரும் அச்சகங்களும் நீங்கள்
எம் தவறுகளுக்கு
சுட்டெரிக்கும் ஆதவனாய் சிலகணம்
என்னென்று மாறினாயோ சந்திரனாய் மறுகணம்
நிலைமாறுதல் உனக்குதானோ
சூழ்நிலையறிந்து சுற்றமும்மறிந்து
வாழ்க்கையில் ஒளிபெருகியதும் நீங்கள்
ஐயா..
செந்தாமரை இல்லா குளங்களும் அழகில்லை
மேகமில்லா வான்வெளியும் அழகில்லை
கணியில்லா மரங்களும் அழகில்லை
உயிரில்லா உடம்பும் அழகில்லை
அதுபோல்
நின் புகழில்லா புவியும் அழகில்லை
உயிருக்கு மெய்சேர
புது மனையில் புது மனதில் குடிபுகும்
இரு மனங்களே நீவிர்
நீடு புகழ் நிறை கொண்டு
இல்லறத்தில் நலங்கொண்டு
புவிதனை ஆளுகின்ற செங்கோலாய்
பதினாறும் பெறுக பெற்று
இனைந்து பல சாதனை படைத்தது
உம்மை ஈன்றவரை மறவாத வாழ்வு கொண்டு
இம்மக்கள்தான் மணமக்கள் என
உலகம் பாசூடி
என்றும் மென்மையாய் மேன்மையாய் உம்
வாழ்கை சிறந்தோங்க
என் இறைவிதனை வேண்டி
திருமங்கள வாழ்த்து கூறுகிறேன்
நீவிர் நீடு வாழ்க.......
மாச்சரியங்கள் மூழ்கடிக்க
---ஆச்சர்யங்கள் முளைக்கிறது
தாத்பரியங்கள் அறியாமலேயே
----சாத்வீகம் சாணக்கியமாகிறது!
நட்பேந்திய நெஞ்சுக்குள்
---நெருஞ்சியொன்று தைக்குது
தையலின் தயவுகளில்
---மையலாகிறது மனது!
மகராலயப் பேரலைகள்
---மதர்த்த நினைவிலடிக்குது
மதுரத் தேனோடைகள்
---எதார்த்தமாய் பாய்கிறது!
வங்கண வசியங்களில்
---பிரம்மச்சரியம் வழுவுகிறது
இங்ஙனம் வாழுங்கால்
---வாமனமும் வான்தொடுது!
பங்கயம் இதழ்மலர்ந்து
---பாயிரம் படிக்குது
பந்தமும் கொண்டாடிட
---பரிசமிட துடிக்குது!
எங்ஙனம் மறைத்தாலும்
---எனதாசை வெடிக்குது
வசந்த அழைப்புகளில்
---என்மனம் சிரிக்குது!
தலைவணகுகிறேன்
சென்னை: தேங்கி கிடந்த மழை நீரில் மின்கசிவு இருப்பதை கண்டுபிடித்து, பயணிகளை கால் வைக்க விடாமல் குரைத்து தடுத்தது ஒரு நாய். ஒரு கட்டத்தில் தான் குரைத்ததை பொருட்படுத்தாமல் மழைநீரில் கால் வைக்க துணிந்த இளைஞரை காப்பாற்ற, அதே நீரில் பாய்ந்து உயிரைவிட்டது. சென்னையில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. அதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. சென்ட்ரல் புறநகர் ரயில் (...)