ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
எந்தையும் தாயுமாய் தாயின் உறவுகளாய்
பகுதியில் வந்த பகுத்தறிவாளர் நீங்கள்
தியாகத்தின் உருவமல்லவே நீங்கள்
உருவத்தின் உருவகங்கள்
அர்ச்சனை செய்வதிலும் வல்லவர்கள்
சிறந்த வார்ப்புகல் தரும் அச்சகங்களும் நீங்கள்
எம் தவறுகளுக்கு
சுட்டெரிக்கும் ஆதவனாய் சிலகணம்
என்னென்று மாறினாயோ சந்திரனாய் மறுகணம்
நிலைமாறுதல் உனக்குதானோ
சூழ்நிலையறிந்து சுற்றமும்மறிந்து
வாழ்க்கையில் ஒளிபெருகியதும் நீங்கள்
ஐயா..
செந்தாமரை இல்லா குளங்களும் அழகில்லை
மேகமில்லா வான்வெளியும் அழகில்லை
கணியில்லா மரங்களும் அழகில்லை
உயிரில்லா உடம்பும் அழகில்லை
அதுபோல்
நின் புகழில்லா புவியும் அழகில்லை
உயிருக்கு மெய்சேர்க்கும் அழகே
அழகிற்கு அழகுசேர்க்கும் ஆசிரியனே
உமக்கு என் ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்.....
என்றும் அன்புடன்
மு. பாலச்சந்தர் a