என்னவளே

இத்தனை நாட்கள் எப்படியோ வாழ்ந்திட்டேன் ,,,
இனி எப்படி வாழ்வேன் என்னருகில் நீ இன்றி ,,,
மரத்தடி நிழல்கள் ,,,
முதல் சந்திப்பு ,,,
சந்தை வீதி ,,,
மழை சாரல் நொடிகள் ,,,
செல்ல சண்டை ,,,
பிடிவாத கோவம் ,,,
கண்ணம் கிள்ளும் கைகள் ,,,
திருட்டு முத்தம் ,,,
உன்னுடன் தானடி இப்படியொரு முதல் காதல் ,,,
உள் உயிரிலே சிறையான ஒரு காதல் ,,,
அன்பானவளே எதையும் எதிர் பாரா காதல்
எதற்கடி கொண்டாய் என்மேல் ,,,
என் செல்ல அரக்கியாய் , அடுத்த அன்னையாய்
எதற்கடி ஆனாய் நீ ,,,
என் வாழ்வும் சாவும் உன்னோடே ,,,
உன் நினைவின்றி என் ஒரு நாலும் இயங்காதே ,,,
நீ உணவருந்த மறுத்தால் கூட
என் இமை தூங்காதே ,,,
இவ் வருடம் அரை வருட வேகத்தில் கழிந்தது உன்னோடு ,,,
இனி வரும் இரண்டாண்டு பிரிவு
நான்காண்டு வேகத்தில் நகருமே, என் செய்வேன் என் தோழியே ,,,,!
இந்த பிரிவின் நொடிகளின் துவக்கத்தில்
எதற்கடி இத்துணை கண்ணீர் ,,,
இந்த ஊரிற்கு கண்ணீர் பஞ்சமும் வந்திட போகிறது ,,,,
எந்நிலையில் இருந்தாலும் எழுந்திடுவேன் உனக்காய்
உன் கண் இமை கண்ணீர் கொள்ள கூடாதம்மா ,,,!!!!