Kavin - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Kavin |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Nov-2021 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 0 |
இருளின் துவாரங்களை
விழித்துப் பார்க்கிறேன்
பொருளற்ற மௌனம்
என் சொற்களை களவாட
ஒளியற்ற வெளியில்
என் உடல் தனித்திருக்கிறது..
சுவாசத்தின் ஏற்ற இறக்கங்களை
கணம் கணம் உணர்கிறேன்..
வியர்வை படிந்த உடலில் காற்று நுழைய
சில்லென தேகம் உறைகிறது..
தொலைவில் யாரோ ஒருவரின் காலடி ஓசை
விட்டு விட்டு நெருங்கி ஒலிக்கின்றது..
என் முன்னறை கதவைத் தட்டிய பின்,
விழிப்படைந்து எழுகையில்
ஓசை மெல்ல மெல்ல அமிழ்கிறது..
வியர்வை உடல் பரவ நழுவி ஒழுக
மனதில் பயம் பரந்து விரிகிறது..
ஒப்பனையாக தைரியத்தை பூசிக்கொண்டு
எழுந்து கதவைத் திறக்க முயல எதிரே
இருள் வெளியில் ஓர் நிழலுருவம்
ஆழ்ந்த சிந்தனை
அமைதியற்ற நிலை
வார்த்தைக்கு விடுதலை
கண்ணுக்கு திரை
நெஞ்சின் ஓரம்
நெடுந்தூரப் பயணம்
புதைந்த புதையல்
பிரிக்காத சிப்பி
சிதைத்துப் பார்த்தேன்
தேவையற்ற தேடல்கள்
வேண்டாமென மூடும்முன்
உள்நுழைந்த உன் உணர்வு
மூர்ச்சையாயின என்னுள்
உணர்ந்தேன் உன்னுள்
உதித்து என்னுள்
மரித்த உணர்வுக் குவியல்
புரிந்தது புண்ணான
இதயம்
புதிரான என்னால்
ஈரமான இதயம்
சிலையான என் நிலை
காதலே நீ யார்
எங்கு இருந்து வந்தாய்
உன் உருவம் தெரியவில்லை
உன் காதல் வலையில் விழாத ஆள்
இல்லை
காதலே நீ காதலிக்காக
தடையில்லை
உன்னை வர்ணிக்காகத கவிஞர்
யாரும் இல்லை
நீ வாழ தா இதயம் என்று ஒன்று
இந்த உலகில் இதுவரை இல்லை
உனக்கு அறிமுகம் தேவையில்லை
நீ வருவதை யாரிடமும் சொல்வது
இல்லை
இரு இதயங்களை இணைப்பதே
உன் கடமை