சிலையான நிலை
ஆழ்ந்த சிந்தனை
அமைதியற்ற நிலை
வார்த்தைக்கு விடுதலை
கண்ணுக்கு திரை
நெஞ்சின் ஓரம்
நெடுந்தூரப் பயணம்
புதைந்த புதையல்
பிரிக்காத சிப்பி
சிதைத்துப் பார்த்தேன்
தேவையற்ற தேடல்கள்
வேண்டாமென மூடும்முன்
உள்நுழைந்த உன் உணர்வு
மூர்ச்சையாயின என்னுள்
உணர்ந்தேன் உன்னுள்
உதித்து என்னுள்
மரித்த உணர்வுக் குவியல்
புரிந்தது புண்ணான
இதயம்
புதிரான என்னால்
ஈரமான இதயம்
சிலையான என் நிலை