KALAI SELVI - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/aqbne_49334.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : KALAI SELVI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 6 |
ஆழ்ந்த சிந்தனை
அமைதியற்ற நிலை
வார்த்தைக்கு விடுதலை
கண்ணுக்கு திரை
நெஞ்சின் ஓரம்
நெடுந்தூரப் பயணம்
புதைந்த புதையல்
பிரிக்காத சிப்பி
சிதைத்துப் பார்த்தேன்
தேவையற்ற தேடல்கள்
வேண்டாமென மூடும்முன்
உள்நுழைந்த உன் உணர்வு
மூர்ச்சையாயின என்னுள்
உணர்ந்தேன் உன்னுள்
உதித்து என்னுள்
மரித்த உணர்வுக் குவியல்
புரிந்தது புண்ணான
இதயம்
புதிரான என்னால்
ஈரமான இதயம்
சிலையான என் நிலை
இருளின் துவாரங்களை
விழித்துப் பார்க்கிறேன்
பொருளற்ற மௌனம்
என் சொற்களை களவாட
ஒளியற்ற வெளியில்
என் உடல் தனித்திருக்கிறது..
சுவாசத்தின் ஏற்ற இறக்கங்களை
கணம் கணம் உணர்கிறேன்..
வியர்வை படிந்த உடலில் காற்று நுழைய
சில்லென தேகம் உறைகிறது..
தொலைவில் யாரோ ஒருவரின் காலடி ஓசை
விட்டு விட்டு நெருங்கி ஒலிக்கின்றது..
என் முன்னறை கதவைத் தட்டிய பின்,
விழிப்படைந்து எழுகையில்
ஓசை மெல்ல மெல்ல அமிழ்கிறது..
வியர்வை உடல் பரவ நழுவி ஒழுக
மனதில் பயம் பரந்து விரிகிறது..
ஒப்பனையாக தைரியத்தை பூசிக்கொண்டு
எழுந்து கதவைத் திறக்க முயல எதிரே
இருள் வெளியில் ஓர் நிழலுருவம்
அவசர செய்திவர பதறிய அம்மா
அன்பான பக்கத்து வீட்டில்
அடைக்கலமாய் விடப்பட்டேன்
கடைவரை சென்ற மாமி
கிடைத்த நேரத்தை..
ஆண்உருப்பறியா நான்..
மரணவலி..
அடிவயிறு ஓலமிட அலாரமின்றி விழித்திட
விழியோர ஈரம் வலியின் உச்சம்
உயிரியல் மாற்றம்
உதிரம்வழி - முதல் அடி
பதறிப்பாய தாய்மடி
சிதறிய வார்த்தை
பக்கம் வராதே -அடுத்த அடி
தவறேன்ன செய்தேன்
உடல்வலியோடு மனவலி
பக்கத்து வீட்டக்கா
பக்குவமா சொன்னாள்
உனக்குள் உயிர்
உருவாகும் உன்னதம்
பூப்பெய்தல் -பதராதே
நீயும் ஓர்நாள்
தாயாகும் அச்சாரம்
இயற்கையின் உயர்பதவி
முகத்தில் பொலிவு
நாணக்கோடுகளோடு -நான் பெண்!!
விரலுக்கிடையில் தீப்புகை
விரல் தாங்கும் கோப்பை
விரக்தி வாழ்க்கை
விட்டொழிக்க எண்ணமுண்டு
வயிற்றுப் பசிப்போல் ..
அன்னிச்சை செயல்கள்
தாமாக தேடும் கைகள்
தடைபோடும் புத்திக்கு பூட்டு
“இளைப்பாரா இதயம்போல்
மலர் சூடா மனதுடன் என்னவள்
தலை தாங்க தேடும் தோள்
இமைமூடா இரவுகள்
கலவை கவலை
தாங்கும் உறவிருந்தும்
தாக்கும் தனிமை”
கண்விழித்தேன் சட்டென
கனவில் என்னவள்
கணவன் காணா கைம்மை
கன்னத்தை பேய் அறைந்தேன
கண் தேட இருக்குமிடம்
எதிர்கால சாத்தியம்
நிகழ்கால கனவில்
நிறம்மாற முயற்சித்தேன்
நித்தமும் அக்கனவால் அஞ்சி
விரலுக்கிடையில் தீப்புகை
விரல் தாங்கும் கோப்பை
விரக்தி வாழ்க்கை
விட்டொழிக்க எண்ணமுண்டு
வயிற்றுப் பசிப்போல் ..
அன்னிச்சை செயல்கள்
தாமாக தேடும் கைகள்
தடைபோடும் புத்திக்கு பூட்டு
“இளைப்பாரா இதயம்போல்
மலர் சூடா மனதுடன் என்னவள்
தலை தாங்க தேடும் தோள்
இமைமூடா இரவுகள்
கலவை கவலை
தாங்கும் உறவிருந்தும்
தாக்கும் தனிமை”
கண்விழித்தேன் சட்டென
கனவில் என்னவள்
கணவன் காணா கைம்மை
கன்னத்தை பேய் அறைந்தேன
கண் தேட இருக்குமிடம்
எதிர்கால சாத்தியம்
நிகழ்கால கனவில்
நிறம்மாற முயற்சித்தேன்
நித்தமும் அக்கனவால் அஞ்சி