கணவன் காணா கனா

விரலுக்கிடையில் தீப்புகை
விரல் தாங்கும் கோப்பை
விரக்தி வாழ்க்கை
விட்டொழிக்க எண்ணமுண்டு
வயிற்றுப் பசிப்போல் ..
அன்னிச்சை செயல்கள்
தாமாக தேடும் கைகள்
தடைபோடும் புத்திக்கு பூட்டு

“இளைப்பாரா இதயம்போல்
மலர் சூடா மனதுடன் என்னவள்
தலை தாங்க தேடும் தோள்
இமைமூடா இரவுகள்
கலவை கவலை
தாங்கும் உறவிருந்தும்
தாக்கும் தனிமை”

கண்விழித்தேன் சட்டென
கனவில் என்னவள்
கணவன் காணா கைம்மை
கன்னத்தை பேய் அறைந்தேன
கண் தேட இருக்குமிடம்

எதிர்கால சாத்தியம்
நிகழ்கால கனவில்

நிறம்மாற முயற்சித்தேன்
நித்தமும் அக்கனவால் அஞ்சி

எழுதியவர் : ப. கலைச் செல்வி (18-Aug-20, 10:48 am)
பார்வை : 88

மேலே