முதல் நாணக்கோடு

அடிவயிறு ஓலமிட அலாரமின்றி விழித்திட
விழியோர ஈரம் வலியின் உச்சம்

உயிரியல் மாற்றம்
உதிரம்வழி - முதல் அடி
பதறிப்பாய தாய்மடி
சிதறிய வார்த்தை
பக்கம் வராதே -அடுத்த அடி

தவறேன்ன செய்தேன்
உடல்வலியோடு மனவலி

பக்கத்து வீட்டக்கா
பக்குவமா சொன்னாள்
உனக்குள் உயிர்
உருவாகும் உன்னதம்
பூப்பெய்தல் -பதராதே
நீயும் ஓர்நாள்
தாயாகும் அச்சாரம்
இயற்கையின் உயர்பதவி
முகத்தில் பொலிவு
நாணக்கோடுகளோடு -நான் பெண்!!

எழுதியவர் : ப. கலைச் செல்வி (19-Aug-20, 3:06 pm)
சேர்த்தது : KALAI SELVI
பார்வை : 61

மேலே