Thara - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Thara |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 10-Sep-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 2949 |
புள்ளி | : 770 |
புல்லின் மேல் பனித்துளி
புன்னகை சிந்தும் உன் இதழ்
ஓரு துளி
பூமித்தாயே உன்னைத் மெல்ல
தொட்டு
வளரும் சின்னஞ்சிறு விதை மொட்டு
விருட்சமாய் நீ எழுவாய் பச்சைப்பட்டு
மழையாய் உன் ஆனந்தத்தை கொட்டு
இயற்கை அன்னையின் பாதம் தொட்டு
இருள் சூழ்ந்த உலகில்
வெளிச்சம் தருவது கதிரவனின்
வேலை
அழகான வார்த்தை அம்மா
பத்து மாதம் சுமந்து
பார்த்து பார்த்து வியந்து
பாசத்தை அளித்து
பேசி சிரித்து
பெருமையாக என்னை நினைத்து
உனக்குள்ளே என்னை வடித்து
அழகாக இந்த பூமியில் என்னை
படைத்தது நீ தான் அம்மா
உயிரில் கலந்த வார்த்தை அம்மா
அணை இல்லா நெஞ்சம்
அலை பாயும் உன் நினைவு கொஞ்சம்
நாம் பழகிய காலம் மனதோடு போகும்
உன் தோள் சாய்ந்த நேரம் மனதுக்கு
இனிமையாகும்
இரவில் உன் முகம் இதயத்தில் ஓடும்
இனிய கனவுகள் எனக்குள்ளே வாழும்
இதயத்தை தொட்டு பறித்து போகும்
பல ஜென்மம் சேர்ந்து வாழ கடவுளை
வேண்டும்
காலம் கடந்தாலும் நம் காதல் வாழும்
காதல் கவிதையே நீ என்
வாழ்க்கை ஆகும்
காதல்தீவில் நான் தொலையா
வில்லை
அவள் காலடி படும் மணலாக மாற
நினைக்கிறேன்
காற்றில் மிதந்து வரும்
இன்னிசையில் அவளை
நேசிக்கிறேன்
அதன் வரிகளை நான் மௌணமாக
ரசிக்கிறேன்
ஒரு திசையில் நீ இருக்கிறாய்
மாறு திசையில் நான் இருக்கிறேன்
இடையில் காதல் செல்கிறதே
அழகாக
உன் நிழல்லை கையில் பிடிக்க
நினைக்கிறேன் அது முடியவில்லை
எதிர்காலம் என்னை கடந்து
போகிறாதே
அழகாக அவள் வந்தாள் அன்பை
எனக்கு தந்தால் நிலவின் ஒளியில்
நடந்து சென்றோம்
விதையாய் விழுந்த
நீ விருட்சமாய் வளர்ந்து
திரைகடலின் வெள்ளிமலரின்
வெள்ளைபூக்களையாய் வெளிவந்த
சின்ன கலைவண்ணர் சிரிப்பின்
சிந்தனையாய் மண்ணின் மைந்தன்
பசுமை நாயகன் மறைந்தும் மலர்ந்து
கொண்டே வாழ்வர்