காதல் அலை நீ அணை நான் ❤️💕
அணை இல்லா நெஞ்சம்
அலை பாயும் உன் நினைவு கொஞ்சம்
நாம் பழகிய காலம் மனதோடு போகும்
உன் தோள் சாய்ந்த நேரம் மனதுக்கு
இனிமையாகும்
இரவில் உன் முகம் இதயத்தில் ஓடும்
இனிய கனவுகள் எனக்குள்ளே வாழும்
இதயத்தை தொட்டு பறித்து போகும்
பல ஜென்மம் சேர்ந்து வாழ கடவுளை
வேண்டும்
காலம் கடந்தாலும் நம் காதல் வாழும்
காதல் கவிதையே நீ என்
வாழ்க்கை ஆகும்