இஸ்
"இஸ்"
======
குட்டி என்ன பண்றீங்க
படுத்துக்கிடக்கேன்
அப்படியா, குட்டி சாப்பிட்டீங்களா
ஆமா ம்ம்
எழுந்திருக்க மடி, உறக்கமே வருது
இப்படியே
தூங்கிட்டிருந்தா
இன்னும் ரெண்டே மாசந்தான்
அப்பறம் குண்டாகிடுவீங்க,
ஆமா
இப்படி தூங்க என்ன சாப்பிட்டீங்க
தயிர்சோறு
ராகிக்கூழ்
உடம்பிளைக்கிறேன் என்றவனுக்கு
ஆசை ஊக்கி ஆகிறாயே
சுடுசோறு மீதும் கெட்டித் தயிர் மீதும்
நாவின் மோகம்
மோசம்போகிறதே
பரவால்லை
நீ கட்டிப்பிடிக்க அதே வயிறு உனக்குக்கிடைக்குமே
என்கிறாய்
காதல் விரும்பும் குழந்தை ஒருத்தி
கோபிக்கத் தெரியாது டா
என்று சொல்லுவதைப்போல
குட்டிக்குட்டியாய், விட்டுவிட்டுக் கோபிக்கிறாள்
நகைப்பூட்டுவதாக நினைத்து
எய்யும் என்
கோமாளி அம்புகள்
ஒவ்வொன்றாக பொளிந்துகொண்டிருக்கின்றன
உன் முகம் திருப்பி
சிரிப்பை அடக்க முயலும் போது
அதற்கான
சான்றுகளையெல்லாம்
தலையணைக்கென்றே ஒப்பிக்கிறாய்
நான் பாவமில்லையா
படபடத்த போர்வை றெக்கைக்குள்ளிருந்து
கண்கள் மருள
எட்டிப்பார்ப்பதும்
உள்ளே போவதுமாய் அரங்கேறும்
குருவி விளையாட்டு,
தொட்டால் வாடி எல்லை
கட்டில்வரைதான்,
ஒரு கண் கெஞ்சும்போது மறு கண் மிஞ்சும்
கட்டிப்பிடிக்க ஓடும்போது
கடையாணி அடித்ததுபோல்
கைகள் ரெண்டும்
தாக்கும்,
தோடு தொலைத்த துளையை நோக்கி
பார்வை ஊசி பாயலாம்
வேளையில்,
ஊரல் மட்டும் நாணல் ஆகி
வாசிக்கொண்டு நெளியும்,
கருங்கூந்தல் திரை அகன்று
காட்டருவி பொழியும்,
எத்தனைத் தொட்டும்
வெட்கமுறும் கால்கள் இடை,
விட்டுப்பிரியாமல், கட்டிப்புரள்கிறதே,
கரைப் பிடித்தே நீந்தும் வித்தையை
மீசைக் கொண்டு
தோற்கடிக்கலாம், கொஞ்சம் விட்டுத்தா
திறக்கினிடை மறக்கிறேன் சமயத்தில்
மின்னஞ்சல் சொல்கிறாள்
சாப்பிட்டேன்
மருந்து குடிச்சுட்டேன்
வேலைக்காரியும், கூட்டுக்காரியும் வந்திருக்காங்க
பேசிக்கிட்டிருக்கோம்
நீர்வெம்மி இயக்கிருக்கிறேன்
இனி குளிக்கப்போகணும்
பிறகு பேசறேன்
என்ற உன் தொடர் வாக்கியங்களுக்குள்
சலிக்கவில்லை
வாழ்ந்து கிடக்கிறேன்
வழக்கம்போல நான் பாவம் என்பதைத் தவிர
விடுகையில்
விட்டுவைக்கும் ஒற்றைச்சொல்
நாயகனாகிவிட்டு
அடுத்ததெப்போது அழைப்பாய் என்றே
பணி சாய்கிறேன்
உன் சிரிப்பு வரையும்
திறந்தவெளி சித்திரத்திரை
கலையாமல் இருக்க
வரைய வரைய பதிவு செய்கிறேன்,
ஊழிபோல்,
பொய்து நின்ற பேச்சுகளோடு,
இடை நிறுத்தாதே பயணிக்கிறேன்,
இனியேதும் கேட்காதே,
துளிபோலும் நகராதே,
காடுத்தோற்கும், கதழ் நின்றால்,
அயர்ச்சி விலக்கி
அலைக்கழிக்கிறேன் வலி எனது
ஏன் பிடிக்கும் என்கிறாய்
ஊறலோ, தேறலோ
முன்பெல்லாம் குடித்தால் தான் போதை,
இன்றெல்லாம்
உன்னோடு உரையாடும்போதே
போதை,
நேற்றுவரை தோழியானவளோடு
ஒருசேர நடந்துபோகுகையில்
காற்று வீசி
தாவணி கழலும் நொடி
மனதிற்கு "இஸ்" என்றிருக்குமே
அப்படியொரு கள்ள போதை
கடந்தமுறைக் கனவில்,
ஆசைத்தீர
உன்னைப் புணர்ந்துவிட்டு
நடுநிசியில்
நீ ஆடைத் தப்பும் அழகைக் காணும் போது
மீண்டும் இழுத்து
புணரலாமா என்பதைப்போல்
"இஸ்" என்றிருக்குமே
அப்படியொரு கள்ள போதை
எங்கிருந்தோ பறந்துவந்த மயில்பீலி
ரோமம் தொட்டு
கடந்து வீழுகையில்
ஆண்மை பொங்கி எழும்பும்போது
"இஸ்" என்றிருக்குமே
அப்படியொரு கள்ள போதை ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"