கவிதைக்கு கவிதை

எனக்காய் ஒரு கவிதையென
ஏங்கி கேட்டாள்
ஏக்கம்தான் எனக்கும் கவிதை
கேட்ட கவிதையின்
ஏக்கம் தீர்க்க

உவமை சொல்ல
ஒன்றும் இல்லை
அவளுக்கு நிகராய்

வர்ணிக்க வார்த்தை
வையகத்தில் இல்லை

புது மொழி
புவியில் வேண்டும்
காதலி அவளை
கவிபாட

தவித்து
களைத்து
கண் மூட
தெரிந்தது
அவள் முகம்

தெரிந்த
சிறந்த
உயர்ந்த
கவிதை
இதுவென
அவள் புகை படம் அனுப்பினேன்

எழுதியவர் : ஜெகன் ரா தி (14-Sep-18, 11:23 am)
Tanglish : kavithaiku kavithai
பார்வை : 960

மேலே