காந்தியம் சாத்தியமே

அடுத்தவர் வலியும் துன்பமும் அறிந்து
தடுத்திட முனைவோர் உண்மையில் உண்மையாய்
தொடுக்கும் கடவுளின் ஊழியன் என்பதை
உடுத்திய கொள்கையில் உணர வைத்தவர்
சிந்தையில் எந்த நாளும் தேசமாம்
இந்திய நாட்டின் விடுதலை நினைந்தவர்-அவர்க்கு
முந்திய எவரும் தந்திரா வழிகளை
சொந்தமாய் அளித்த விந்தை மனிதர்
நன்மையே செய் தீமைக்கு எதிராய் என
அண்மையில் இயேசு சொன்னதைச் செய்தவர்
குலவிடும் அஹிம்சை கொள்கை வகுத்தவர்
பேச்சினில் விடுதலை மட்டுமே பேசியும்
பாய்ச்சிய கோலினை பாசமாய் தடுத்தும்-உயிர்
மூச்சிலும் செய்கை முழுதிலும் சத்தியம்
வீச்சென வாழ்ந்தவர் சாத்தியம் சொன்னவர்

எழுதியவர் : தா . ஜோ . ஜூலியஸ் (14-Sep-18, 11:31 am)
பார்வை : 99

மேலே