பெற்றோர்

பெற்றோர்...

பிரபஞ்ச அழகி
என வலம்
வந்தவள்
கண்ணோடு கண்
திரிந்து பின்
உடன் இயைந்த
அன்பினால்
மனம் கலந்து
காதல் புரிந்து
கணவனே
தஞ்சமென மணம்
புரிந்து
சல்லாப சந்தோஷ
கடலில் அமிழ்ந்து
பெண்ணின் திருவுருவ
தாய்மை அடைந்து
நாளொரு மேனியாய்
அனுபவித்து
கருவறையில் பிறை வளர
அனுதினமும் கை தழுவ
குமட்டலும் வாந்தியும்
நெஞ்சை குத்த
ஐயிரண்டு திங்கள்
நிறையுற்று அன்னை என
பெயர் பெற்றால்
பிள்ளை இவன் பிறந்ததாலே
இத்துடன் தொல்லைகள்
நீங்கினவா
இனிதான பிள்ளை வளர்ந்திடவே
நல்இரவு தூங்காமல்
விழித்திருந்து வேண்டும் மட்டும்
புகட்டிடவே பால் வேண்டி
தவமிருந்தால்
இத்தனையும் நடந்து
பால் பிராயம் மறந்த
பிள்ளைக்கு சோறூட்டி சீராட்டி
பாராட்டி வளர்த்தெடுத்தாள்
இந்த அன்னையவள்
இப்போது திண்ணையிலே
கண்டு கொள்வார் யாருமின்றி

இந்த பிள்ளை வளர்க்கும் எந்திரங்கள் இப்புவியிலே
நிறைய உண்டு
என்ற நினைப்பில்
வாழும்
பிள்ளைகளே
உங்களின்
வருங்காலம் சந்ததியும்
சிந்தனை செய்யும்
உங்களை போல

உங்களுக்காக உங்க
பெற்றோரை கவனியுங்கள்...

பெற்றோரும் குழந்தைகளே
முதுமையிலே...

எழுதியவர் : த பசுபதி (14-Sep-18, 12:33 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : petror
பார்வை : 280

மேலே