lathaponnarivu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : lathaponnarivu |
இடம் | : dharapuram |
பிறந்த தேதி | : 24-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 266 |
புள்ளி | : 61 |
காதலை சுவாசிப்பவன் ,கவிதையை நேசிப்பவன்....
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vishal-announces-education-aid-poor-students-253977.html
என்று விடியும் ??????
அவள் வாழ்வை நேசித்தாள்: அவள் வறுமையிலும் இந்த வாழ்வை மிக நேசித்தாள். அவள் வறுமையை வெளிக்காட்டி யாரிடமும் பாரிதாபத்தை கோரியதில்லை. அவளது வயதான வகுப்பு தோழி ரீட்டா, “விடுதிக்கும், கல்லூரிக்கும் சில மைல்கள் தூரம். ஆனால், அவள் என்றுமே பேருந்தில் பயணித்தது இல்லை. காரணம் பேருந்து கட்டணம். தினமும் பல மைல் தூரம் நடந்தே கல்லூரிக்கு வருவாள். அவள் சாப்பிட்டும் நாங்கள் பெரும்பாலும் பார்த்ததில்லை. சாப்பிட்டால் தானே பார்ப்பதற்கு. நாங்கள் உணவு கொடுத்தாலும், அதை வாங்க அவள் தன்மானம் இடமளிக்கவில்லை.”
அவள் பெரும்பாலும் தனிமையில் தான் இருந்திருக்கிறாள். ஒன்று ஏதாவது யோசனையில் இருப்பாள் அல்லது புத்தகத்தில் புதைந்து இருப்பாள். அவளின் ஒரே தோழி ரீட்டா மட்டுமே.
ரீட்டா சொல்கிறார், “கல்லூரி முடிந்து நடக்கும் சிறப்பு வகுப்புகளில் அவள் என்றுமே பங்கெடுத்ததில்லை. வீட்டில் தனியாக அம்மா இருப்பார் என்ற காரணத்தினால், அவள் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று விடுவாள்.”
அவளின் இன்னொரு கனவாக இருந்தது வீட்டிற்கான நிலை கதவு. பல ஆண்டுகள் அவள் கதவில்லாத வீட்டில் தான் வசித்து இருக்கிறாள். ரீட்டா ஒரு முறை கதவிற்கு பணம் தருவதாக சொன்ன போதும் அவள் வாங்க மறுத்திருக்கிறாள்.
ஆனால், இவ்வளவு அழுத்தங்கள் தாண்டியும் அவள் வாழ்வை மிக நேசித்தாள். வாழ்வில் முன்னேற வேண்டும். இந்த வறுமையை வென்றெடுக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அவளது அம்மா ராஜேஸ்வரி சொல்கிறார், “தன் போல் வறுமையில் இருக்கும் பெண்களுக்காக போராட வேண்டும் என்று விரும்பினாள். அதனால் தான் அவள் சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். ஆனால், பொருளாதார நெருக்கடியால் அவளால் கல்லூரிக்கு தொடர்ந்து செல்ல முடியவில்லை”
“எங்கள் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் தான் கோயில் இருக்கிறது. சாமி நடந்து வந்திருந்தால் கூட எங்களை காத்து இருக்கலாம்... ஏனோ எங்களை காக்க மட்டும் சாமி எப்போதும் வர மாட்டேன் என்கிறது...” என்று வெடித்து அழுகிறாள் ராஜேஸ்வரி.
அவளும், அவளது அம்மா ராஜேஸ்வரியும்தான் அந்த சிறிய வீட்டில் தனித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களது தனிமையை பயன்படுத்தி, பல முறை அவளை பயன்படுத்தி கொள்ள சில ஆண்கள் முயற்சித்து இருக்கிறார்கள். அவளது பாதுக்காப்பிற்காகவே ராஜேஸ்வரி அவளுக்கு பென் காமிரா வாங்கி கொடுத்து இருக்கிறாள்.
அவள் நிர்பயா இல்லை:நிர்பயா சம்பவத்தில் அனைத்து அறங்களையும் காத்த தேசிய ஊடகங்கள். இந்த கேரள பெண் விஷயததில் எதையும் கண்டுகொள்ளவில்லை. நிர்பயா சம்பவத்தில் இந்தியாவே கொதித்து எழுந்தது. ஏன் தமிழ்நாட்டில் கூட அனைத்து மாவட்டங்களிலும் மெளன ஊர்வலங்கள் நடந்தது. இந்தியாவே நியாயம் கேட்டது. ஆனால், இவள் மரணத்திற்காக அப்படி யாரும் நீதி கோரவில்லை. கேரள எல்லைகளை தாண்டி எந்த போராட்டமும் நடந்துவிடவில்லை.எது நம்மை தடுக்கிறது. நிச்சயம் நிர்பயாவிற்காக நடந்த உன்னத போராட்டங்களை நான் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், அது போல் ஏன் யாரும் இவளுக்காக போராட வரவில்லை...?
மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டம், கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், கூலித்தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் இவரது மனைவி ஊரில் இருந்த உயர் வகுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது கிணற்றின் உரிமையாளர், தண்ணீர் எடுக்க கூடாது என கூறியிருக்கிறார்.
இதையடுத்து, அவர் அழுது கொண்டே வீட்டிற்கு வந்திருக்கிறார். மனைவி அழுவதை பார்த்து விரக்தி அடைந்த பாபுராவ், தனது வீட்டிற்கு அருகில் தனியாக கிணறு வெட்ட ஆரம்பித்திருக்கிறார்.
பாபுராவ் வெட்டிய கிணற்றுக்கு அருகில் ஏற்கனவே 3 கிணறுகளும், ஒரு ஆழ்துளை கிணறும் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்திருக்கிறது. இதனால், பாபுராவை அவரது மனைவி உள்பட உறவினர்கள் அனைவருமே விமர்சனம் செய்ததோடு, யாரும் கிணறு வெட்ட உதவியும் செய்யவில்லை.இருப்பினும், மனம் தளராத பாபுராவ், தினமும் வேலைக்கு செல்வதற்கு முன் 4 மணி நேரமும், வேலை முடிந்து வந்த பின் 2 மணி நேரமும் கிணறு வெட்டியிருக்கிறார். விடா முயற்சியாக பாபுராவ் வெட்டிய கிணற்றில் 40 நாளில் தண்ணீர் வந்திருக்கிறது. அதுவும் அதிகமான தண்ணீர் ஊற்றெடுத்திருக்கிறது.
இப்போது அந்த கிணற்றில் இருந்து தாழ்த்தப்பட்டவர் மட்டுமின்றி, உயர் சாதியினரும் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.
இதுகுறித்து பாபுராவ் கூறுகையில், ''எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த உரிமையாளர் பெயரை கூற விரும்பவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் தண்ணீர் மறுக்கப்பட்டது. இதனால், எப்படியாவது தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி கடவுளை மட்டுமே நினைத்து வேண்டிவிட்டு, பக்கத்து ஊருக்கு சென்று கிணறு வெட்டும் பொருட்களை வாங்கி வந்தேன்.
எனது வேண்டுதலின் பயனாக கடவுள் இந்த இடத்தில் தண்ணீர் வர வைத்து இருக்கிறார். இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, உயர் சாதியினரும், எங்களுக்கு தண்ணீர் தர மறுத்தவர்களும் இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர்'' என்றார்.இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்ததும், தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். அதோடு, எந்தவிதமான உதவியும் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
தனி ஒருவனாக நின்று 40 நாட்களாக கடுமையான உழைப்பின் மூலம் கிணறு வெட்டி, இன்று ஊருக்கு தண்ணீர் வழங்கும் பாபுராவ் தஜ்னேவை பார்த்து ஊரார் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்
"என்னை
பிரிந்து
சென்று
இன்னொருவனுடன்
வாழும்
உன்
காதல்
புனிதமானது
என்றால்..!
உன்
பிரிவின்
வலிகளை
அனுபவித்து
என்
வாழ்க்கையை
இழந்து
பிறகு
யோசித்து
உன்
நினைவுகளை
இழக்க
நினைக்கும்
என்
காதலும்
புனிதமானது
தானடி..!
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)
பெய்யாத மழையில்
நனையும் குடைகள் ..
-காதல் விற்பனன்
ஏழையாகப் பிறக்கலாம்
கோழையாக இருக்காதே..!
-திருமூர்த்தி
நேற்று மருதமலையிலே பார்த்த காட்சி இது. கோயிலுக்கு வந்தவர்கள் சாப்பிட உட்கார்ந்ததும் இந்த ஆடு அங்கே வந்திருக்கிறது.
அவர்களும் அந்த ஆட்டை "சூ சூ... போ அந்தாண்டே..." எனத் துரத்தாமல்.. தங்களை விட்டுத் தள்ளி ஒரு ஓரமாய் தட்டிலே சாதம் வைத்து.... போ... என விரட்டாமல்..அந்த ஆட்டுக்கும் தங்களோடு சேர்த்து ஒரு தட்டு உணவு வைத்துப் பரிமாறியிருக்கிறார்கள்..
இவர்களின் அன்பும், அந்த ஆடு சாப்பிடும் அழகும், மனசுக்கு நெகிழ்வாக இருந்தது பார்க்க. அனுமதியோடு இந்தப் படத்தை எடுத்ததும்....
"புளிசாதம்தான் ரொம்பப் பிடிச் (...)
உலக தந்தையர் தினமான இன்று தந்தையாய் இருப்பவர்களுக்கும், நாளை தந்தையாய் ஆகா போகிறவர்களுக்கும் வாழ்த்து கூறிவிட்டு மனிதயின தந்தையர்களை போலவே தனது குழந்தைகளுக்காக ஒப்பற்ற தியாகங்களை புரியும் பறவையின தந்தையை பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.
அது எம்பரர் பென்குயின் எனும் பறவை ஆகும்.
மார்ச் மாதம் அண்டார்டிக்கா கண்டத்தின் கோடையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் எம்பரர் பென்குயின்களை அவைகளின் இனப்பெருக்க தளங்களுக்கும் வரவேற்கிறது. உருகிய பனி துவாரங்களாக உள்ள கடற்க்கரை விளிம்புகளில் இருந்து 70 மைல்களுக்க (...)
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பாவடித் தெருவைச் சேர்ந்த குமார் - சாந்தி தம்பதியின் மகன் லோகநாதன், 17. இவர், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்; பொதுத்தேர்வில், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றதை தொடர்ந்து, கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக்., பள்ளியில், பிளஸ் 2 இலவசமாக முடித்தார்.
பிளஸ் 2 தேர்வில், 1,080 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், இன்ஜினியரிங், கட் - ஆப், மதிப்பெண்ணாக, 192 பெற்றுள்ளார். அதன் மூலம்,மேற்படிப்பு படிக்க மாணவர் விரும்புகிறார (...)
நாளிதழில் நான் அறிந்தது
வெயிலடிக்கும் மரத்தடியில், கோவில் நுழைவாசலில், மக்கள் நெரிசல் மிகுந்த தெருக்களில் என, சென்னையின் பெரும்பான்மையான இடங்களில், பிச்சைக்காரர்களை பார்க்க முடியும். சோகம் வழியும் அவர்களின் குரல்களுக்கு என்றாவது நாம் காது கொடுத்திருப்போமா? அவர்களிடம் நிறைய கண்ணீர் உண்டு. நம்மிடம் தான் காதுகளில்லை. ஆனால், சிறியவர்கள் என, நாம் நினைக்கும் பள்ளி மாணவர்கள், அவர்களுக்கு பெருவாழ்வு தந்திருக்கின்றனர். பெரம்பூர், 'கல்கி ரங (...)