கீர்த்தி ஜெயராமன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கீர்த்தி ஜெயராமன்
இடம்:  கத்தார்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Nov-2014
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  21

என்னைப் பற்றி...

என்னைப்பற்றி கூற பெரிதாக ஒன்றும் இல்லை. சிவில் இன்ஜினியரிங் முடித்து கத்தாரில் பனி புரிகிறேன். புத்தகங்கள், கவிதைகள் வாசிப்பதும் எப்பொழுதாவது கவிதைகள் எழுதுவதும் எனக்கு பிடித்த விடயங்கள். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது எனக்கு பிடித்த இன்னொரு விடயம்....

என் படைப்புகள்
கீர்த்தி ஜெயராமன் செய்திகள்

இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேடுபவர்களை என்னவென்று சொல்வது..??????? 

சென்ற திங்கள் கிழமை என்னுடைய அலுவல் விடயமாக சென்னைக்கு சென்று இரண்டுநாள் தனகவேண்டியதாகப்போய்விட்டது.மழையின் காரணமாக வேலையும் முடியாதநிலையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஊருக்கு கிளம்பவும் முடியாமல்போனது. இந்தநிலையில் வியாழன் மதியம் தாம்பரம்சாலையில் போக்குவரத்து சீராகவே ஊருக்கு கிளம்பினேன். தாம்பரத்தில் அரிதாக கிடைத்த கும்பகோணம் செல்வதக்கான பெருந்தைப்பிடித்து ஏறினேன். கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துவிட்ட காரணத்தினால் பேருந்து முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகளே நிறைந்திருந்தனர்.

ந்த நிலையில் பெருங்குலத்தூரை பேருந்து அடைந்ததும் மேலும் பேருந்துக்குள் கூட்டம் முண்டியடித்தது. ஒருவழியாக ஏழரை மணியளவில் விக்கிரவாண்டி வந்தடைந்தபோழுதே அந்த தர்ம சங்கட நிகழ்வு நடக்க ஆரம்பித்தது. என்னுடைய நேர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருக்காதல்(??) ஜோடி தங்களது லீலைகளை ஆரம்பித்துவிட்டனர். பேருந்துக்குள் கிட்டத்தட்ட முழுதும் நனைந்திருந்த கல்லூரி மாணவிகள், பாவம் நிர்க்கக்கூட முடியாமலும், பேருந்தின் கண்ணாடி இல்லாதா ஒரு ஜன்னல் வழியே வீசிகொண்டிருந்த மழைக்காற்றால் குளிரில் நடுங்கிக்கொண்டே தங்களது சாலினை தலை முழுதும் சுற்றிக்கொண்டும் போர்த்திக்கொண்டும் அவதியுற்ற நிலையில் அந்த காதலர்களோ ஒருவர் மடிமீது ஒருவர் மாறி மாறி படுத்துக்கொண்டு ஏதோ நன்கு சுவருக்குள் இருப்பதுப்போல் சல்லாபமும் கொஞ்சலுமாக இருந்தனர். நொந்துபோன மாணவிகளோ அந்தகாதலர்களை பார்த்து சங்கடத்துடன் திரும்பியும், அதேநேரம் மற்ற ஆண்களோடு செர்ந்துநிர்ப்பதில் அவர்கள் அடைந்த அந்த சொல்லமுடியாத நிலை இருக்கிறதே அதை இங்கே என்னால் விளக்கவே முடியவில்லை.

எத்தனையோ முறை அருகில் அமர்ந்திருந்த மாணவனும், நானும் நாசுக்காக அவரளுக்கு எடுத்துக்கூரியும் மது அருந்தியிருந்த அந்தமாணவன் கண்டுக்கொள்ளவேயில்லை. ஒரு சமயத்தில் பேருந்துக்குள் ஓடிக்கொண்டிருந்த பழைய இளையராஜா இசையையும் தாண்டி அவர்களின் முனகல் சத்தம் வெளியே கேட்கவே சகமாணவன் ஒருவன் எழுந்துசென்று நடத்துனரிடம் புகார் தெரிவித்தான். நடத்துனர் வந்து கேட்டதற்கு, ஏடாக்கூடமான இடத்தில் விட்டிருந்த தன் கையை சிரமத்துடன் வெளியே எடுத்துவிட்டு 
நாங்கள் காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அசதியில் தூங்குகிறோம் , அதில் என்னதவறு என்பதுபோல் விவாதம் செய்துகொண்டே அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மறுபடியும் தனது அந்த சிறந்த பணியை தொடர்ந்தார்....!!!!!!!

ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது...... மக்கள் உடமைகளை,உறைவிடத்தையும் ஏன் உயிரைக்கூட இழந்து தவிக்கின்றனர். ஊருக்கு சென்று சேர்வோமா பாதியில் வெள்ளத்தில் பேருந்தோடு போய்விடுவோமா என்று பயந்து பயந்து பயணித்துக்கொண்டிருக்க இவர்களைப்போன்று எந்தவிதப்பொருப்புமின்றி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துக்கொல்பவர்களை என்னவென்று சொல்வது.....??????

மேலும்

அது மனித ஜென்மமன்று . 06-Dec-2015 3:42 pm
பயணங்கள் முடிவதில்லை!!! 06-Dec-2015 3:39 pm
கீர்த்தி ஜெயராமன் - கீர்த்தி ஜெயராமன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2015 6:44 pmவரதட்சணையே வாங்காத மணமும்....!!
வல்லுரவே நடக்காத தினமும்.....!!! 
எல்லோரையும் மனையாளாய் நினைக்காத குணமும்......!!!! 
நம்மிடையே  சாத்தியமான அக்கணமே ... ........!!!!!
கொண்டாடுவோம் நமக்கென்று ஒருதினம்.......!!!!!!
உண்மையான ஆடவர் தினம்....!!!!!! 

மேலும்

தங்கள் கருத்தை மனமுவந்து ஏற்கிறேன் அண்ணா..... நன்றி.... 20-Nov-2015 12:14 pm
இப்படியெல்லாம் கண்டிசன் போட்டால், மகளிர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம் உட்பட எதையுமே கொண்டாட முடியாது, தம்பி! நல்லார்கண் பட்டதே உலகு. ஆகையால் கொண்டாடுவோம்! 20-Nov-2015 12:06 amவரதட்சணையே வாங்காத மணமும்....!!
வல்லுரவே நடக்காத தினமும்.....!!! 
எல்லோரையும் மனையாளாய் நினைக்காத குணமும்......!!!! 
நம்மிடையே  சாத்தியமான அக்கணமே ... ........!!!!!
கொண்டாடுவோம் நமக்கென்று ஒருதினம்.......!!!!!!
உண்மையான ஆடவர் தினம்....!!!!!! 

மேலும்

தங்கள் கருத்தை மனமுவந்து ஏற்கிறேன் அண்ணா..... நன்றி.... 20-Nov-2015 12:14 pm
இப்படியெல்லாம் கண்டிசன் போட்டால், மகளிர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம் உட்பட எதையுமே கொண்டாட முடியாது, தம்பி! நல்லார்கண் பட்டதே உலகு. ஆகையால் கொண்டாடுவோம்! 20-Nov-2015 12:06 am
கீர்த்தி ஜெயராமன் - கீர்த்தி ஜெயராமன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2015 3:08 pm

எனது சிறுவயதில் எங்கள் நிலத்தின் அருவடைக்காலங்களில் களத்துமேட்டுக்கு சென்று நெற்க்கதிரை அடித்து காற்றில் தூவி இதர பிற வேண்டாதவைகளிலிருந்து நெல்மணிகளை பிரித்தெடுப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருப்பேன்...!!!
சிலசமயங்களில் காற்றின்வேகம் குறைவாக இருந்து நெல்லை தூற்ற இயலாமல் போகும்....!!!
அச்சமயங்களில் எனது தந்தை களத்துமேட்டில் நெல்தூற்றபடும் இடத்திற்கு நேரெதிர் திசையில் " காத்தவராயன் " என்னும் எங்கள் எல்லை தேய்வத்தை வேண்டிக்கொண்டு சிறிதளவு வைக்கோலை குவித்துவைத்து எரியூட்டுவார்... என்னையும் அது அணையாமல் சிறிதுநேரம் தொடர்ந்து எரிய உதவும்படி பணிப்பார்....!!

அது என்ன மாயமோ சிறிது நேரம் கழிந்த பிறகு கொஞ்சம் காற்றும் வீச தொடங்கும், இதை கண்டதனாலே அந்த வயதில் (அப்பொழுதெல்லாம்) எனக்கு காத்தவராயன், ஐய்யனார் போன்ற எல்லைத் தெய்வங்கள் மீது பயம் கலந்த பக்தி இருக்கும்.

நான் மேல்நிலை பள்ளியில் படிக்க துவங்கிய பொழுது காற்றுக்கு எடை உண்டு என்பதை நிருபிக்கும் ஒரு செய்முறை பாடத்தினை கற்றுக்கொண்ட பொழுதே அதுசம்பந்தமான மேலும் எனது தேடல்களால் நான் அறிந்துகொண்டவை.....,

காற்றுக்கு எடையை தருவது அதில்  உள்ள ஈரப்பதமே.....!!
காற்றை வேப்பமூட்டுவதால் அதில் உள்ள நீர் நீராவியாக வெளியேறி அது தன் எடையை இழக்கிறது....!!
மேலும் எடைகுறைந்த காற்று வளிமண்டலத்தின் மேல்நோக்கி பயணித்து அங்கு ஒரு வெற்றிடத்தை உண்டுபண்ணுகிறது.....!!
அந்த வெற்றிடமானது அதனைசுற்றியுள்ள ஈரப்பதம் நிறைந்த காற்றால் நிரப்பப்படுகிறது.....!!!

இதே வினைதான் களத்துமேட்டில் காத்தவராயனால் நிகழ்த்தப்படுகிறது.......!!!!!!!!!

( இதை எனது தந்தையிடம் ஓடிவந்து நான் கூறியபொழுது அலட்சியமாக ஒரு பார்வையையும், ஒரு சிறு புன்னகையையும் மட்டுமே எனக்கு பதிலாக கிடைத்தது. )

மேலும் எனது புரிதலின் தொடர்ச்சியாக........
அந்த வினை காத்தவராயனால் கலத்துமேடுகளில் நடத்தப்படுவதாக எனது தந்தையையும் அவரது முன்னோர்களையையும்  அவர்களது முன்னோர்கள் நம்பவைத்திருக்கிராரகள்......!!!!

அல்லது இந்த அறிவியல் உண்மையை வெகு காலத்திற்கு முன்பே கண்டுபிடித்த அந்த எனது தமிழ் குடியோனையே அந்த காற்றுக்கே தலைவனாக்கி அவருக்கு ஒரு பெயரையும்  ( காத்தவராயன் ) இட்டு போற்றியிருக்கிறார்கள்.....!!!!!!!!
நாளடைவில் அவரே கடவுளாக போற்றப்பட்டு இன்றும் பூஜிக்கப்படுகிறார்....!!!!!

அதனை புரிந்துகொண்டதனாலே என் தந்தை இறக்கும் வரை அவருடைய எந்த விதமான தெய்வவழிபாடுகளையும் நான் பழித்ததில்லை....

ஆனால் இந்த போலிதிராவிடவாதிகள்   நமது தமிழ் முன்னோர்கள் சொல்லிய கடவுளர்கள் பற்றிய உண்மையான புரிதல் இல்லாமலும், இடையில் வந்த ஆரிய பார்ப்பனர்கள்  புகுத்திய கடவுளர்கள், வழிப்பாட்டு முறைகளை போட்டு குழப்பிக்கொண்டும் ஒட்டுமொத்த தமிழ் முன்னோர்களையும்(கடவுளர்கள்), தமிழர்களையும், நமது வழிபாட்டு முறைகளையும் சாடுகிறார்கள்....

இங்கே எனது முன்னோர்களின், எனது  தந்தையின் கடவுள் நம்பிக்கையையும், அவரது வழிப்பாட்டு முறையையும் முட்டாள்தனமானது என்று எந்த பெரியாரியம் பேசும் மனிதர் சாடினாலும் அவர்களை எனது கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன்.
கோபத்துடன்,
கீர்த்தி ஜெயராமன்.

மேலும்

கீர்த்தி அவர்களே, நீங்கள் எழுதியது, என்னையும், என் சிறு வயது களத்துமேட்டு அனுபவங்களையும் நினைவு கூற வைத்தது. நீங்கள் கவனித்த இதே நிகழ்வை நானும் பல முறை கவனித்து இருக்கிறேன், அதுவே நீங்கள் எழுதியதை முழுக்க படிக்க தூண்டியது. தொடர்ந்து எழுதுங்கள், நன்றி. 20-Sep-2015 6:46 pm
கீர்த்தி அவர்களே, பரவாயில்லை, உங்களின் செவி சாய்ப்புக்கு மிக்க நன்றி. 20-Sep-2015 6:37 pm
நீங்கள் கூரிய அந்த விஷம் நீக்கப்பட்டது.... தங்கள் கருத்துக்கு நன்றி... 19-Sep-2015 7:40 pm
மன்னிக்கணும் சகோ.... காலையிலிருந்து ஒருத்தன் என்ன ரொம்ப நோகடிச்சுட்டான் அதான்.... :-( 19-Sep-2015 7:04 pm

கீர்த்தி ஜெயராமன் - விடுகதைகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2015 12:36 pm

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

மேலும்

சைக்கிள் 02-Sep-2015 2:01 pm

சென்ற இரு தினங்களுக்கு முன்பு எனது உறவுக்கார பெண் ஒருத்தியின் திருமண ஏற்பாட்டின் ஒரு அங்கமான மாப்பிள்ளை வீட்டாரை சென்றுகானும் நிகழ்வில் கலந்துகொண்டேன். அப்பொழுது அங்கே நடந்தேறிய சில நிகழ்வுகள் என்னை வெகுவாக பாதித்ததன் விளைவே இந்த பதிவு.

அது அப்படியொன்றும் புதிதாக நான் கண்ட நிகழ்வல்ல. காலம் காலமாக நம்மில் ஊரிபோன ஒன்றே. பெண்வீட்டார் கொடுக்கவேண்டிய வரதட்ச்சனை பற்றிய விவாதமே. பெண்ணிற்கும், மாப்பிளைக்கும் கொடுக்கவேண்டிய தங்கம், சீர் வகைகள், மாப்பிள்ளைக்கு இரு சக்கர மோட்டார் வாகனம் என்று அந்த பட் (...)

மேலும்

கீர்த்தி ஜெயராமன் - கீர்த்தி ஜெயராமன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2015 12:35 pm

உலக தந்தையர் தினமான இன்று தந்தையாய் இருப்பவர்களுக்கும், நாளை தந்தையாய் ஆகா போகிறவர்களுக்கும் வாழ்த்து கூறிவிட்டு மனிதயின தந்தையர்களை போலவே தனது குழந்தைகளுக்காக ஒப்பற்ற தியாகங்களை புரியும் பறவையின தந்தையை பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.

அது எம்பரர் பென்குயின் எனும் பறவை ஆகும்.

மார்ச் மாதம் அண்டார்டிக்கா கண்டத்தின் கோடையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் எம்பரர் பென்குயின்களை அவைகளின் இனப்பெருக்க தளங்களுக்கும் வரவேற்கிறது. உருகிய பனி துவாரங்களாக உள்ள கடற்க்கரை விளிம்புகளில் இருந்து 70 மைல்களுக்க (...)

மேலும்

மிக்க நன்றி.... 05-Jul-2015 3:59 pm
இதுவரை அறிந்திராத செய்தி ..நல்ல செய்தியும் கூட.... 04-Jul-2015 3:20 pm
மிக்க நன்றி... 27-Jun-2015 9:00 am
நல்ல பதிவு. நன்றி! 26-Jun-2015 7:41 pm
கீர்த்தி ஜெயராமன் - ப்ரியஜோஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2015 11:25 am

யாராவது என் பின்னால்
வரவேண்டுமென்று ஆசை.

எழுந்து நடந்தேன்.

திரும்பிப் பார்த்தால்
என்
பின்னால் யாருமில்லை.

முகம் திருப்பி
முன்னால் பார்த்ததும்
திடுக்கிட்டேன்.

எனக்கு முன்னே
என் நிழல்.

நிழலின் பின்னால்
நடக்கிறேன் நான்.

கோபத்தில்
நிழலொடு சண்டையிட்டேன்.
நான் வெளிச்சம்.
நீயென் இருட்டு.
என் பின்னே வா
நிழல் சிரித்துக் கொண்டது.

நான் நிஜம்.
நீயென் பொய்.
என் பின்னே வா!
நிழல் சிரித்துக் கொண்டது.

நீ என்
பாதங்களைக் கழுவுகிறக்
கறுப்புத் தண்ணீர்.
என்பின்னே வா!
நிழல் ச (...)

மேலும்

நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல் முன்னோடி.உண்மை உணர்த்தும் கருத்தும் விளக்கமான தத்துவக் களஞ்சியமாக அமைந்துள்ளது. படைப்புகள் பல தொடர வாழ்த்துக்கள் 07-Sep-2015 3:20 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி தோழரே 13-Jul-2015 11:53 am
மிக்க நன்றி தோழரே 13-Jul-2015 11:52 am
நிழல் கவிதை, பொய்யுக்கும் நிஜத்திற்குமான போராட்டங்களை அலசிச் செல்கிறது......தேடலில் தத்துவம் பொதிந்துள்ளது அந்த தத்துவத்தை வெளிக் கொணரும் விதமாக கவிஞரே இதைமேலும் செதுக்கும் பொழுதில் பொதிந்து கிடக்கும் தத்துவ பொக்கிஷம் இன்னும் கூர்மை pera வாய்ப்பு உள்ளதென்று உணர்கிறேன்..... ஏனெனில் கவியின் உள்ளீடாக கொண்ட கருப் பொருள் அற்புதமான ஒன்று.... 11-Jul-2015 1:22 pm
கீர்த்தி ஜெயராமன் - கீர்த்தி ஜெயராமன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2015 1:20 pm

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அருள்மொழி வர்மன் (ராஜா ராஜா சோழன்) என்கிற நமது பாட்டன் இந்த தஞ்சை கோயிலை கட்டிமுடித்த பொழுது அதற்காக நன்கொடை அளித்தவர்கள் அனைவரின் பெயரையும் கோவிலின் சுவர்களில் பொரிக்க சொன்னாராம் என்று படித்திருக்கிறேன். அவ்வாறே செய்தும் உள்ளார்கள்.

ஆனால் நம்மில் சிலர் அப்படி என்ன நன்கொடை அளித்தார்கள் என்று தெரியவில்லை கோவில் சுவர்களில் தங்களுடைய பெயரையும் இலவச இணைப்பாக தங்களுடைய காதலியின் பெயரையும் எழுதுவதில் அத்துனை ஆனந்தம் அடைகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் தங் (...)

மேலும்

கீர்த்தி ஜெயராமன் - கீர்த்தி ஜெயராமன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2015 1:09 pm

பாம்புகள் பற்றிய உண்மையான புரிதல் இல்லாத நிலையால் மீண்டும் ஒரு இழப்பு....

புடையான் என்று (எங்கள் ஊரில்) அழைக்கப்படும் இந்தவகை பாம்பை கண்டதும் தலையை வெட்டி எடுக்கும் பழக்கம் எங்கள் ஊரில் உள்ளது. இதற்கு வாலில் விஷம் இருப்பதாகவும் , இது தனது வாலால் அடித்து தாக்கும் என்றும் அப்படி தாக்கினால் தோல் வியாதிகள் ஏற்படும் என்றும் நம்புகிறார்கள்.
உண்மையில் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் இந்தவகை பாம்பு சொரசொரப்பான மற்றும் கடினமான தோலினை உடையது. இதனாலே இதனை அடித்து கொள்வதற்கு கடினம் என்பதால் கண்டதும் தல (...)

மேலும்

பாம்பூ கரி சுவி ஆகா இருகும். 20-Apr-2015 3:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முரு

முரு

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

இவரை பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே