எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாம்புகள் பற்றிய உண்மையான புரிதல் இல்லாத நிலையால் மீண்டும்...

பாம்புகள் பற்றிய உண்மையான புரிதல் இல்லாத நிலையால் மீண்டும் ஒரு இழப்பு....

புடையான் என்று (எங்கள் ஊரில்) அழைக்கப்படும் இந்தவகை பாம்பை கண்டதும் தலையை வெட்டி எடுக்கும் பழக்கம் எங்கள் ஊரில் உள்ளது. இதற்கு வாலில் விஷம் இருப்பதாகவும் , இது தனது வாலால் அடித்து தாக்கும் என்றும் அப்படி தாக்கினால் தோல் வியாதிகள் ஏற்படும் என்றும் நம்புகிறார்கள்.
உண்மையில் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் இந்தவகை பாம்பு சொரசொரப்பான மற்றும் கடினமான தோலினை உடையது. இதனாலே இதனை அடித்து கொள்வதற்கு கடினம் என்பதால் கண்டதும் தலையினை வெட்டி எடுத்துவிடுகிறார்கள். எல்லா பாம்புகளை போலவும் கூச்ச சுபாவம் கொண்ட இந்த வகை பாம்பு சிறிய வகை பறவைகள், எலிகளை உண்டு வயல்வெளிகளில் உள்ள வெடிப்புகள் மற்றும் பொந்துகளில் வாழக்கூடியவை. மனித குடியிருப்பு பகுதிகளில் இந்தவகை பாம்புகளை காண்பது மிகவும் அரிது.

அடிப்பட்டு இறந்த நிலையில் நான் கண்ட இந்த பாம்பு கூட குடியிருப்பு பகுதியில் இருந்து வெகு தொலைவில் கொல்லப்பட்டதே.

நண்பர்களே நமது குடியிருப்பு பகுதியில் திரியும் பாம்புகளை ( அது நச்சு பாம்போ அல்லது நச்சற்ற பாம்போ ) கண்டதும் ஒருவித பயத்தினாலும் முறையாக அதனை பிடித்து குடியிருப்புக்கு வெகுதொலைவில் கொண்டுவிடுவதர்க்கான நபர்கள் நம்மிடையே இல்லாத காரணத்தினாலும் அதனை அடித்து கொள்வதை கூட ஒருவகையில் எற்றுக்கொள்ளலாம். ஆனால் குடியிருப்பு பகுத்தியில் இருந்து வெகுதொலைவில் அதனுடைய சொந்த வாழ்விடங்களிலேயே நடக்கும் இதுபோன்ற கொலையினை மனம் ஏற்கமருக்கிறது.

நாள் : 20-Apr-15, 1:09 pm

மேலே