எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானத்துல பறக்குது ஏறோப்ப்லேனு - நீ ஓகே சொன்னா...

வானத்துல பறக்குது ஏறோப்ப்லேனு - நீ ஓகே சொன்னா
மாமா உனக்கு வாங்கி தரேன் ஐ போனு ..

ஆறு டிஜிட் சேலரி எம்மாடி - இங்க
ஆடோக்காரனு வாங்குறான் உன்மடி ..

ஐடி கட பீசாக் கட பழசு மச்சி ,
கச்சி கோடி காவி வேட்டி பேசன் ஆச்சி ..

எம் எஸ் சி எம் பி பி எஸ் வேஸ்ட்டு மச்சி ,
நீ பத்தாவது முடிச்சிட்டு போடு பச்சி ..

கள்ளக் காதல் நொள்ளக் காதல் பார்த்தீயா ,
உன்ன பீச்சுப் பக்கம் போகாதன்னே கேட்டியா ..

ஓட்டுக்கு பணம் வாங்கி வருஷம் ஆச்சி ,
இங்க ஒபாமா வந்தாலும் இதா பேச்சு ..

பள்ளி போற பொன் கொழந்த பத்திரம் டா ,
அங்க வாத்தியாரும் மாறுவான் எமநாடா ..

ஓட்டப் போட்ட சட்டகுள்ள சட்டம் டா ,
உள்ள போனவனும் வந்தவனும் சொல்லுறான் டா ..

காக்கி சட்ட போட்ட காமராஜர் அந்த காலம் ,
சட்டக்குள்ள லஞ்ச பணம் இந்த காலம் ..

சேர்த்து வச்ச பணம் எல்லாம் என்ன ஆச்சு ,
சீட்டுப் போட்டு பலருக்கு பங்காச்சு ...

காலு தேய உளச்ச கணக்கு என்ன ஆச்சி,
அரசாங்க பாருக்குள்ளே காலியாச்சு ..

ஆளுங்கட்சி எதிர்கட்சி சூப்பர் மச்சி ,
மாறி மாறி குத்துனாலும் நீ மாறாத மச்சி ..

ரோடப் போட்டு தண்டவாளம் விட்டு ,
தனியாருக்கு கொடுத்தாச்சு ..

மாமியாரு தொல்லை எல்லாம் ,
முதியோர் இல்லத்தோட போச்சு ..

சாமியாரு காட்ட வெட்டி ,
கட தொறந்தாச்சு ..

மதமுன்னு சாதியின்னு பேசுறான் ,
சோத்துக்கே வலி இல்லா மடப் பையன் ..

-- கற்குவேல் .பா .

நாள் : 20-Apr-15, 12:06 pm

மேலே