எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது சிறுவயதில் எங்கள் நிலத்தின் அருவடைக்காலங்களில் களத்துமேட்டுக்கு சென்று...

எனது சிறுவயதில் எங்கள் நிலத்தின் அருவடைக்காலங்களில் களத்துமேட்டுக்கு சென்று நெற்க்கதிரை அடித்து காற்றில் தூவி இதர பிற வேண்டாதவைகளிலிருந்து நெல்மணிகளை பிரித்தெடுப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருப்பேன்...!!!
சிலசமயங்களில் காற்றின்வேகம் குறைவாக இருந்து நெல்லை தூற்ற இயலாமல் போகும்....!!!
அச்சமயங்களில் எனது தந்தை களத்துமேட்டில் நெல்தூற்றபடும் இடத்திற்கு நேரெதிர் திசையில் " காத்தவராயன் " என்னும் எங்கள் எல்லை தேய்வத்தை வேண்டிக்கொண்டு சிறிதளவு வைக்கோலை குவித்துவைத்து எரியூட்டுவார்... என்னையும் அது அணையாமல் சிறிதுநேரம் தொடர்ந்து எரிய உதவும்படி பணிப்பார்....!!

அது என்ன மாயமோ சிறிது நேரம் கழிந்த பிறகு கொஞ்சம் காற்றும் வீச தொடங்கும், இதை கண்டதனாலே அந்த வயதில் (அப்பொழுதெல்லாம்) எனக்கு காத்தவராயன், ஐய்யனார் போன்ற எல்லைத் தெய்வங்கள் மீது பயம் கலந்த பக்தி இருக்கும்.

நான் மேல்நிலை பள்ளியில் படிக்க துவங்கிய பொழுது காற்றுக்கு எடை உண்டு என்பதை நிருபிக்கும் ஒரு செய்முறை பாடத்தினை கற்றுக்கொண்ட பொழுதே அதுசம்பந்தமான மேலும் எனது தேடல்களால் நான் அறிந்துகொண்டவை.....,

காற்றுக்கு எடையை தருவது அதில்  உள்ள ஈரப்பதமே.....!!
காற்றை வேப்பமூட்டுவதால் அதில் உள்ள நீர் நீராவியாக வெளியேறி அது தன் எடையை இழக்கிறது....!!
மேலும் எடைகுறைந்த காற்று வளிமண்டலத்தின் மேல்நோக்கி பயணித்து அங்கு ஒரு வெற்றிடத்தை உண்டுபண்ணுகிறது.....!!
அந்த வெற்றிடமானது அதனைசுற்றியுள்ள ஈரப்பதம் நிறைந்த காற்றால் நிரப்பப்படுகிறது.....!!!

இதே வினைதான் களத்துமேட்டில் காத்தவராயனால் நிகழ்த்தப்படுகிறது.......!!!!!!!!!

( இதை எனது தந்தையிடம் ஓடிவந்து நான் கூறியபொழுது அலட்சியமாக ஒரு பார்வையையும், ஒரு சிறு புன்னகையையும் மட்டுமே எனக்கு பதிலாக கிடைத்தது. )

மேலும் எனது புரிதலின் தொடர்ச்சியாக........
அந்த வினை காத்தவராயனால் கலத்துமேடுகளில் நடத்தப்படுவதாக எனது தந்தையையும் அவரது முன்னோர்களையையும்  அவர்களது முன்னோர்கள் நம்பவைத்திருக்கிராரகள்......!!!!

அல்லது இந்த அறிவியல் உண்மையை வெகு காலத்திற்கு முன்பே கண்டுபிடித்த அந்த எனது தமிழ் குடியோனையே அந்த காற்றுக்கே தலைவனாக்கி அவருக்கு ஒரு பெயரையும்  ( காத்தவராயன் ) இட்டு போற்றியிருக்கிறார்கள்.....!!!!!!!!
நாளடைவில் அவரே கடவுளாக போற்றப்பட்டு இன்றும் பூஜிக்கப்படுகிறார்....!!!!!

அதனை புரிந்துகொண்டதனாலே என் தந்தை இறக்கும் வரை அவருடைய எந்த விதமான தெய்வவழிபாடுகளையும் நான் பழித்ததில்லை....

ஆனால் இந்த போலிதிராவிடவாதிகள்   நமது தமிழ் முன்னோர்கள் சொல்லிய கடவுளர்கள் பற்றிய உண்மையான புரிதல் இல்லாமலும், இடையில் வந்த ஆரிய பார்ப்பனர்கள்  புகுத்திய கடவுளர்கள், வழிப்பாட்டு முறைகளை போட்டு குழப்பிக்கொண்டும் ஒட்டுமொத்த தமிழ் முன்னோர்களையும்(கடவுளர்கள்), தமிழர்களையும், நமது வழிபாட்டு முறைகளையும் சாடுகிறார்கள்....

இங்கே எனது முன்னோர்களின், எனது  தந்தையின் கடவுள் நம்பிக்கையையும், அவரது வழிப்பாட்டு முறையையும் முட்டாள்தனமானது என்று எந்த பெரியாரியம் பேசும் மனிதர் சாடினாலும் அவர்களை எனது கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்பேன்.
கோபத்துடன்,
கீர்த்தி ஜெயராமன்.


நாள் : 19-Sep-15, 3:08 pm

மேலே