எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அங்கே சமூக அவலத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ஓர் எழுத்தாளர்...

அங்கே சமூக அவலத்தீ

கொழுந்துவிட்டு எரிந்தது.
ஓர் எழுத்தாளர் அணைத்துவிடும்
நோக்கத்தில் கூவி கூவி
கவி எழுதி மக்களை கூட்டினார்,
மற்றொர் எழுத்தாளர்  
கூவிய எழுத்தாளரின்
கவிவரியில் சில பிழைகளைக்கூறி
சாகாத்திய அகாடமியின்
 விருது வரும்வழி
தடம் மறித்து  
இலக்கியத்தேரிலேறி
போரிட ...
அவரிடம் முற்போக்கும்
இவரிடம் ஒரு போக்கும்
கூட்டமாய் சேர்ந்திட...

எரிந்த நெருப்பு....
சமூகத்தை எரித்தேவிட்டது 
மாண்ட ஒரு சாமானியனின் 
கருகிய இருதயத்துண்டு......
ஏதோ முனகியதாக
சில  வரிக் கேட்டேன்.. 

”தெரியுமா அற்பர்களே....! 
உங்களிருவர் சண்டைக்கு மத்தியில்
ஒரு சமாதானப் புறா வந்தது.. 

தெரியுமா கலககாரர்களே? 
உங்களிருவர் சண்டையில்
பல நூறு தீக்குச்சிகளுக்கு 
நெருப்பைக் கொடுத்தீர்கள்.. 

 சொல்லுங்கள் எழுத்தாளர்களே..!
நீதியற்ற உங்கள்
விமர்சனப் போரில்
இலக்கியம் வாழுமா... 
சமூகம் செத்தாலும்..? ” 


**

இரா.சந்தோஷ் குமார் 

நாள் : 19-Sep-15, 4:45 pm

மேலே