இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேடுபவர்களை என்னவென்று சொல்வது..??????? சென்ற...
இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேடுபவர்களை என்னவென்று சொல்வது..???????
சென்ற திங்கள் கிழமை என்னுடைய அலுவல் விடயமாக சென்னைக்கு சென்று இரண்டுநாள் தனகவேண்டியதாகப்போய்விட்டது.மழையின் காரணமாக வேலையும் முடியாதநிலையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஊருக்கு கிளம்பவும் முடியாமல்போனது. இந்தநிலையில் வியாழன் மதியம் தாம்பரம்சாலையில் போக்குவரத்து சீராகவே ஊருக்கு கிளம்பினேன். தாம்பரத்தில் அரிதாக கிடைத்த கும்பகோணம் செல்வதக்கான பெருந்தைப்பிடித்து ஏறினேன். கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துவிட்ட காரணத்தினால் பேருந்து முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகளே நிறைந்திருந்தனர்.
இந்த நிலையில் பெருங்குலத்தூரை பேருந்து அடைந்ததும் மேலும் பேருந்துக்குள் கூட்டம் முண்டியடித்தது. ஒருவழியாக ஏழரை மணியளவில் விக்கிரவாண்டி வந்தடைந்தபோழுதே அந்த தர்ம சங்கட நிகழ்வு நடக்க ஆரம்பித்தது. என்னுடைய நேர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருக்காதல்(??) ஜோடி தங்களது லீலைகளை ஆரம்பித்துவிட்டனர். பேருந்துக்குள் கிட்டத்தட்ட முழுதும் நனைந்திருந்த கல்லூரி மாணவிகள், பாவம் நிர்க்கக்கூட முடியாமலும், பேருந்தின் கண்ணாடி இல்லாதா ஒரு ஜன்னல் வழியே வீசிகொண்டிருந்த மழைக்காற்றால் குளிரில் நடுங்கிக்கொண்டே தங்களது சாலினை தலை முழுதும் சுற்றிக்கொண்டும் போர்த்திக்கொண்டும் அவதியுற்ற நிலையில் அந்த காதலர்களோ ஒருவர் மடிமீது ஒருவர் மாறி மாறி படுத்துக்கொண்டு ஏதோ நன்கு சுவருக்குள் இருப்பதுப்போல் சல்லாபமும் கொஞ்சலுமாக இருந்தனர். நொந்துபோன மாணவிகளோ அந்தகாதலர்களை பார்த்து சங்கடத்துடன் திரும்பியும், அதேநேரம் மற்ற ஆண்களோடு செர்ந்துநிர்ப்பதில் அவர்கள் அடைந்த அந்த சொல்லமுடியாத நிலை இருக்கிறதே அதை இங்கே என்னால் விளக்கவே முடியவில்லை.
எத்தனையோ முறை அருகில் அமர்ந்திருந்த மாணவனும், நானும் நாசுக்காக அவரளுக்கு எடுத்துக்கூரியும் மது அருந்தியிருந்த அந்தமாணவன் கண்டுக்கொள்ளவேயில்லை. ஒரு சமயத்தில் பேருந்துக்குள் ஓடிக்கொண்டிருந்த பழைய இளையராஜா இசையையும் தாண்டி அவர்களின் முனகல் சத்தம் வெளியே கேட்கவே சகமாணவன் ஒருவன் எழுந்துசென்று நடத்துனரிடம் புகார் தெரிவித்தான். நடத்துனர் வந்து கேட்டதற்கு, ஏடாக்கூடமான இடத்தில் விட்டிருந்த தன் கையை சிரமத்துடன் வெளியே எடுத்துவிட்டு
நாங்கள் காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அசதியில் தூங்குகிறோம் , அதில் என்னதவறு என்பதுபோல் விவாதம் செய்துகொண்டே அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மறுபடியும் தனது அந்த சிறந்த பணியை தொடர்ந்தார்....!!!!!!!
ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது...... மக்கள் உடமைகளை,உறைவிடத்தையும் ஏன் உயிரைக்கூட இழந்து தவிக்கின்றனர். ஊருக்கு சென்று சேர்வோமா பாதியில் வெள்ளத்தில் பேருந்தோடு போய்விடுவோமா என்று பயந்து பயந்து பயணித்துக்கொண்டிருக்க இவர்களைப்போன்று எந்தவிதப்பொருப்புமின்றி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துக்கொல்பவர்களை என்னவென்று சொல்வது.....??????