எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்ற இரு தினங்களுக்கு முன்பு எனது உறவுக்கார பெண்...


சென்ற இரு தினங்களுக்கு முன்பு எனது உறவுக்கார பெண் ஒருத்தியின் திருமண ஏற்பாட்டின் ஒரு அங்கமான மாப்பிள்ளை வீட்டாரை சென்றுகானும் நிகழ்வில் கலந்துகொண்டேன். அப்பொழுது அங்கே நடந்தேறிய சில நிகழ்வுகள் என்னை வெகுவாக பாதித்ததன் விளைவே இந்த பதிவு.

அது அப்படியொன்றும் புதிதாக நான் கண்ட நிகழ்வல்ல. காலம் காலமாக நம்மில் ஊரிபோன ஒன்றே. பெண்வீட்டார் கொடுக்கவேண்டிய வரதட்ச்சனை பற்றிய விவாதமே. பெண்ணிற்கும், மாப்பிளைக்கும் கொடுக்கவேண்டிய தங்கம், சீர் வகைகள், மாப்பிள்ளைக்கு இரு சக்கர மோட்டார் வாகனம் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இதற்கு முன்பாக பெண்ணையும், பெண்வீட்டாரையும் பார்க்க வந்த பொழுது " எனக்கு பெண்ணை மிகவும் பிடித்திரிக்கிறது " என்று கூறிய மாப்பிள்ளை இப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது என்பதுபோலும், எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பதுபோலும் தூரமாக விலகிசென்று நின்று கொண்டார்.

அவருடைய இந்த நிலைப்பாடு எந்தமாதிரியானது என்று எனக்கு இருதிவரை புரியவே இல்லை. அதேவேளையில் எனது சொந்த தரப்பு கருத்துக்களை நான் கூற முற்பட்டபோழுது " தம்பி இதெல்லாம் உனக்கு புரியாது நீ சற்று நேரம் வெளியே இரு " என்று கிட்டத்தட்ட வலுகட்டாயமாக நான் வெளியேற்றப்பட்டேன். ஒருவழியாக இருவீட்டு பெரியவர்களும்!!!! ( பெரும்பாலும் பெண்களே முன் நின்று பேசினார்கள்) இன்ன இன்ன தரவேண்டும் என்று பேசி முடித்து, வரும்வழியில் "மாப்புள ஓன் கல்யாணத்த சீர் செனத்த இல்லாம பண்ணிக்க" என்பதுபோன்ற கிண்டல் பேச்சுகளோடு மாலைபொழுதில் வீடுவந்து சேர்ந்தேன்.

ஆனாலும் இந்தவிடயம் இரண்டு நாட்களாக என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. "ஆணுக்கு பெண் சமம்" நமது சமுதாயம் கல்வியிலும், சுய ஒழுக்கத்திலும் வெகுவாக முன்னேறிவிட்டது போன்ற கூற்றுகள் எல்லாம் வெறும் பிதற்றல்தாம் போலும்....!!!

விலங்கு உலகில் இன்னமும் காணப்படும் இருபால் உயிரிகளை (மண்புழு, அட்டை மேலும் பல) போல் மனிதனும் இருபால் உயிரியாக இருந்தால் எப்படியிருக்கும்??

பெண்சிசு கொலை என்பதே இருந்திருக்காது...!!!!
வல்லுறவு என்றசொல் வந்திருக்கவே வந்திருக்காது....!!!
பேருந்து முதல் பாராளுமன்றம் வரையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் தேவையே இல்லை....!!!!
கூடல் நேர கிளர்ச்சி மட்டுமின்றி பேருகால பேரின்பமும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும்...!!!!

இப்படி கூறிக்கொண்டே போகலாம்..!!! என்னசெய்ய இயற்கை நம்மை இரண்டு வேறு பாலினங்களாக பிரித்து பெரும் தவறு செய்துவிட்டது என்றே தோன்றுகிறது...!!!!!





நாள் : 2-Sep-15, 1:52 pm

மேலே