எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலக தந்தையர் தினமான இன்று தந்தையாய் இருப்பவர்களுக்கும், நாளை...

உலக தந்தையர் தினமான இன்று தந்தையாய் இருப்பவர்களுக்கும், நாளை தந்தையாய் ஆகா போகிறவர்களுக்கும் வாழ்த்து கூறிவிட்டு மனிதயின தந்தையர்களை போலவே தனது குழந்தைகளுக்காக ஒப்பற்ற தியாகங்களை புரியும் பறவையின தந்தையை பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.

அது எம்பரர் பென்குயின் எனும் பறவை ஆகும்.

மார்ச் மாதம் அண்டார்டிக்கா கண்டத்தின் கோடையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் எம்பரர் பென்குயின்களை அவைகளின் இனப்பெருக்க தளங்களுக்கும் வரவேற்கிறது. உருகிய பனி துவாரங்களாக உள்ள கடற்க்கரை விளிம்புகளில் இருந்து 70 மைல்களுக்கும் அப்பால் உள்ள தங்களின் முன்னோர்கள் பயன்படுத்திய அதே இனப்பெருக்க இடங்களுக்கு இரவும், பகலும் கால்நடையாக சென்று சேரவே பலவாரங்கள் பிடிக்கிறது. வந்து சேர்ந்து இணையை தேடி காதல்கொண்டு, கவவியில் திளைத்து முட்டை இடுவதற்கு ஜூன் முதல்வாரம் ஆகிவிடுகிறது. அதற்குள் குளிர்காலம் தனது உச்சத்தை அடைகிறது. இங்குதான் தந்தை எம்பரர் பென்குயின்களின் கடும் வேலை ஆரம்பிக்கிறது....

முட்டை இட்ட பெண் எம்பரர்கள் அதை தன் ஆண் துணையிடம் அடைகாக்க ஒப்படைத்துவிட்டு உணவைத்தேடி கடலுக்கு விரைகிறது. அடுத்து வரும் இரண்டு மாதங்களும் உறைநிலைக்கு கிழே 80 டிகிரிக்கும் குறைவான மிகக்கடும் குளிரிலும், முடியாது நீளும் இரவிலும், துளைத்து எடுக்கும் சுராவளிகளிலும் தனது முட்டையினை தனது காலுக்கு மேல் தாங்கி அடிவயிற்று மடிப்பில் வைத்து அடைகாக்கும். ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் குஞ்சுகள் பொரிய ஆரம்பித்ததும் தனது உணவு பையில் கடைசியாக மீதம் இருக்கும் கூழ் போன்ற திரவத்தை ஊட்டி அதன் தாய் உணவுடன் வந்து சேரும்வரை அதனை காக்கிறது.

ஆறு மாதங்களுக்கும் மேலாக உணவின்றி இருப்பதால் தனது உடல் எடையில் 50%-திற்கும் அதிகமாக இழப்பதுடன், பல ஆண் எம்பரர்கள் தங்களது உயிரையும் விடுகின்றன.

செப்டம்பர் மாதம் முதல் தாயும், தந்தையும் மாறி மாறி கடலுக்கு சென்று உணவூட்டுகிறது. இவ்வாறாக டிசம்பர் மாத முதல் சில வாரம் வரை உணவூட்டி பின்பு தனது குஞ்சுகளை தனியே விட்டு குறுகிய மூன்று மாத கோடையினை அனுபவிக்க செல்கிறது.

தனியே விடப்பட்ட குஞ்சுகலானது டிசம்பர் மாத இறுதியில் கடலினை சென்றடைந்து தனது வழியில் வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.

நாள் : 21-Jun-15, 12:35 pm

மேலே