எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேற்று மருதமலையிலே பார்த்த காட்சி இது. கோயிலுக்கு வந்தவர்கள்...

நேற்று மருதமலையிலே பார்த்த காட்சி இது. கோயிலுக்கு வந்தவர்கள் சாப்பிட உட்கார்ந்ததும் இந்த ஆடு அங்கே வந்திருக்கிறது.
அவர்களும் அந்த ஆட்டை "சூ சூ... போ அந்தாண்டே..." எனத் துரத்தாமல்.. தங்களை விட்டுத் தள்ளி ஒரு ஓரமாய் தட்டிலே சாதம் வைத்து.... போ... என விரட்டாமல்..அந்த ஆட்டுக்கும் தங்களோடு சேர்த்து ஒரு தட்டு உணவு வைத்துப் பரிமாறியிருக்கிறார்கள்..
இவர்களின் அன்பும், அந்த ஆடு சாப்பிடும் அழகும், மனசுக்கு நெகிழ்வாக இருந்தது பார்க்க. அனுமதியோடு இந்தப் படத்தை எடுத்ததும்....
"புளிசாதம்தான் ரொம்பப் பிடிச்சிருக்கும் போல.. அதை மட மடன்னு முதல்லே சாப்பிட்டு முடிச்சுட்டார் பாருங்க..." என்று சொல்லிப் புன்னகைத்தார் அந்தப் பெண்மணி.
நாங்கள் பேசுவதைக் காதிலேயே வாங்காமல், மண்டி போட்டு உட்கார்ந்த படி சாப்பாட்டிலே மும்முரமாக இருந்தார் ஆடார் அவர்கள்.
"நீங்களும் வாங்க சாப்பிடலாம்.." என எங்களையும் அன்போடு அழைக்க..
சிரித்தபடியே மறுத்து விட்டு நகர்ந்தோம் நாங்கள்... மனிதம் நிறைந்த அந்த மனிதர்களை மனமார வாழ்த்தியவாறே..

பதிவு : உதயகுமார்
நாள் : 8-Jul-15, 8:52 pm

மேலே