ஆத்திரப்படாதே

முன்குறிப்பு: என் மனைவி கொஞ்சம் முன்கோபி... அவளுக்காக எழுதிய அன்பான அட்வைஸ் இது!


ஆத்திரப்படாதே!
அன்பே ஆத்திரப்படாதே!

அன்றாடம் ஆக்ஸிடெண்டுகள்
ஒன்றிறென்டு ஏற்படக்கூடும்
ஆத்திரப்படாதே!

அன்பாய் பெற்றெடுத்த
ஐந்து வயது அல்வா துண்டு
அப்போஇப்போ சிறுகுறும்பு
செஞ்சுத்தான் விளையாடும்
ஆத்திரப்படாதே!


அறிவுஜீவி அப்துல் கலாம்கூட
ஐந்து வயதில் இப்படித்தான்
அடம்பிடித்து அழுதிருப்பார்
ஆத்திரப்படாதே!


ஆபீஸுக்கு போகும்
அவசரத்தில் உன் கணவன்
அங்கும்இங்கும் எதையேனும்
அழுக்குபடுத்தி செல்லக்கூடும்
ஆத்திரப்படாதே!

அன்னிய மக்கள்
அவர்தம் அறியாமையால்
ஏதோ ஒன்றிரண்டு
அவலச்சொல் பேசக்கூடும்
ஆத்திரப்படாதே!

ஆயிரம் காரணம்
ஆத்திரத்திர்குன்டு
அமைதியாய் வாழ ஒன்றே ஒன்று !

அகம் மகிழ புறம் செழிக்க
மனம் சாந்தமாய் பல காலம் மலர்ந்திட
அமைதிதான்
ஆருயிர் மருந்து !

ஆத்திரப்படாதே!
அன்பே ஆத்திரப்படாதே!

எழுதியவர் : ரமேஷ் somasundaram (2-Dec-14, 10:29 pm)
பார்வை : 324

மேலே