கனவு
![](https://eluthu.com/images/loading.gif)
கனவு காணும்
வாழ்க்கையால்
காணாமல் போன
வெற்றிகள்
என்முன்னே
ஏராளம்......!!
ஏற்றுக்கொண்டு
வாழும்
வாழ்க்கை என்னவோ
சுகம் தான்......எனக்காக
மட்டும்
வாழாத வரைக்கும்....!
சுயம் மாறாத
என்
வாழ்க்கை
தந்த சுகங்கள்
கோடி.....சுயநலவாதிகள்
தந்த
துன்பங்களும்
கோடி......!
உறவென்று
சொல்லி
ஓட்டிக்கொண்டவர்கள்
என்
வேரறுத்து
திணித்துச்
சென்றனர்
வேதனைகளை
எனக்குள்......!
குடும்ப
நாடகத்தில்
கௌரவச்
சண்டைகள்.....
திரை
விழாத
முழு நீள
கவலைப்
படம்......!