மாண்டு போகும் மனிதம்---ப்ரியா

மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா

அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!

அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!

கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!

கள்ளகபடமில்லா
பால்முகம்
திக்கி திணறிபேசும்
பிஞ்சுக்குழந்தை
கைப்பிடித்து எழுத்து '
கற்றுக்கொடுக்கும் பருவம்
அந்த மலரா மலர் போன்ற
மழலை முகத்தை பார்த்தும்
பஞ்சு போன்ற பிஞ்சை
நசுக்கி நாசமாக்கும்
ஆசிரியர் என்ற பெயரில்
சில கல்நெஞ்சக்காரர்கள்
மறு பக்கம்......!!!

ஒவ்வொரு நிமிடமும்
என்ன நடக்குமோ?என்று
கண்ணிமைக்கவும் பயப்படும்
பெண்ணினம்......!

துள்ளி விளையாடும் பிள்ளையை
எள்ளி நகையாடும்
காமக்கொடூரர்கள்.......!

இங்கு
பெண்ணுக்கும் சம உரிமையாம்
சுதந்திர தேசமாம்.....

தவறி கீழே விழுந்து விட்டால்கூட
இங்கு யாரை நம்பி கைகொடுப்பது......

எப்பொழுதுதான் திருந்துவார்களோ
இந்த ஈனப்பிறவிகள்........





(முதல் பத்தியில் சொன்னது என்னோட பக்கத்து ஏரியாவுல தாயில்லாத ஒரு பொண்ணுக்கு 9வருடங்களாக நடந்து கொண்டிருந்த ஒரு கொடூரமான சம்பவம்..)

எழுதியவர் : ப்ரியா (22-Nov-14, 2:30 pm)
பார்வை : 543

மேலே