----------உயிர்த்தெழுவாய் என்ற நம்பிக்கையில்------------------
![](https://eluthu.com/images/loading.gif)
----------உயிர்த்தெழுவாய் என்ற நம்பிக்கையில்------------------
நீள வானின் பள்ளதாக்குகளில்
நிலவை தொலைத்து அதை
தேடும் மேகமாய்..
நெட்டை இரவில் தன்
துணையை தேடும்
குட்டை தவளையாய்..
பழங்கள் இல்லா மரத்தை
பலமுறை சுற்றும்
பழந்திண்ணி வௌவாலாய்...
இந் நிறம் அறிய நிழல்களில்
உன் நினைவலைகளை
தேடி அலைகிறேன் என்னவனே...!
அன்று என் மடி சாய்ந்து
நீ எண்ணிய விண்மீனும்
மீண்டும் வான் வந்தது ..
நீ சுவாசித்து நேசித்து
கவி சொன்ன தென்றலும்
இதோ கண்முன் வந்தது..
நீ எங்கே என் அன்பானவனே..?
குளத்து தாமரையின் அழகு
வெளியே மிதந்தாலும்
அதன் வேர் அழுக்கு சகதியில் தானே..!
உன் கண்களுக்காய் நான்
அழகாய் பிறந்தாலும் என்
வேர் இந்த அழுக்கு சாதியில் தானே..!
இதோ அந்த வெறிபிடித்த
சாதி (ஓ)நாய்களிடம் இருந்து
மணமேடை தாண்டி வந்தேன்..!
(ஓ)நாய்களின் வெறியால்
நிலத்தில் சிந்திய உன்
இரத்த துளிகளின் மேல் என்
கண்ணீர் துளிகள் விழும்போதாவது
நீ உயிர்த்தெழுவாய் என்ற நம்பிக்கையில்.........!
------------------------------------------ ச.ஷர்மா
படஉதவிக்கு..: நன்றி முகநூல் நட்பு நிறம் வில்வம்