தூறல் கலந்த என் கண்ணீர்த்துளி 555

பெண்ணே...

தென்றலாக உன்னை
தொடர்ந்து வந்தேன்...

முழுவதும் உனக்கு
என்னை கொடுத்தேன்...

அன்பென்ற வார்த்தையை
பொய் என்றாயடி இன்று...

என் விழிகளில்
தேங்கி நிற்கும்...

கண்ணீர் துளிகள்
சொல்லுமடி...

என் காதலின்
ஆழத்தை...

மழையோடு சேர்ந்து
அழுவதால்...

கீழே சிந்தும்
என் கண்ணீர் துளி...

உனக்கு தெரியாமலே
போகுதடி...

மழை நீரில் பாதம்
நனைக்காதே...

மழையில் கலந்த என்
கண்ணீர் துளிகள் கூட...

குற்றம் என்பாய்...

என் விழிகளில் கண்ணீர்த்துளி
வற்றி போகும் நேரம்...

என் ஜீவனும்
கரைந்து போகுமடி...

அப்போதும் நீ
உணரமாட்டாய்...

உணர்ந்தால் வந்து செல்
என் இறுதி ஊர்வலத்தில்...

உதிரும் பூ மழைகூட
உன் பெயரையே சொல்லுமடி...

வந்துசெல்
உணர்வாய் நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-Nov-14, 3:17 pm)
பார்வை : 345

மேலே