ஷர்மா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஷர்மா
இடம்:  குமரி (தற்போது சென்னை)
பிறந்த தேதி :  14-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Aug-2014
பார்த்தவர்கள்:  915
புள்ளி:  334

என்னைப் பற்றி...

நான் ஒரு கணினி வரை கலை கலைஞர் (Graphic designer)

படித்து : B.Sc (visual communication)
பிடித்தது : வைரமுத்து கவிதைகள், பாரதியார் பாடல்கள்,....இன்னும் பல சொல்லி கொண்டே போகலாம்...

என் தமிழ் எனும் தாயை
காதலிக்க
கால் பதித்தேன் இங்கே

எழுத்து என்னை எழுத்தாளானக மாற்றியாதல்
எதை எதையோ எழுதிகொண்டு இருக்கிறேன்

facebook : https://www.facebook.com/sharma.skss

என் படைப்புகள்
ஷர்மா செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Apr-2015 10:28 pm

காலங்கள் மாறிட கவலைகள் தீர்ந்திடும் -கயல்விழி

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, கால்கள் தடுமாறியது, வாகனங்களின் இரைச்சல் மட்டுமே செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது கணேசனுக்கு.

"யோவ் வீட்ல சொல்லிட்டா வந்த?" யாரோ ஒரு புண்ணியவான் காதருகில் ஓலமிட்டு விலகிச் சென்றான். இதற்கு மேல் முடியவில்லை தள்ளாடி விழப் போனவரை தாங்கிப் பிடித்தது இரு கரங்கள் .

"அச்சோ தாத்தா என்னாச்சு உங்களுக்கு...? பார்த்து வரக் கூடாதா...?"
கணேசனின் மங்கிய விழிகளிலும் வெள்ளை உடையில் தேவதையாய் தெரிந்தாள் அவள் .

"முதல்ல வாங்க... இப்பிடி என் கார்ல கொஞ்சம் நேரம் இருந்து கொள்ளுங்க..." என்றாள்.
இதை தவிர கணேசனுக்கு எதுவு

மேலும்

நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:34 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:32 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:31 pm
katheiyin karuvum mudivum arrumei kaya 16-Apr-2015 11:28 pm
ஷர்மா அளித்த படைப்பில் (public) s sangeetha மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Mar-2015 10:41 am

(( தளத்தில் அனைத்து தோழமைகளுக்கும் நலம் என்று நம்புகிறேன்))


------- மனிதம் வெல்லும்-------

எங்கும் தெரிவது புகை மட்டும் தான்
நான் மட்டும் எதற்கு சுற்ற வேண்டும் என்று
பூமியும் நின்றுவிட்டது போல..

காற்றில் பறப்பதற்கு அங்கே இலைகள் இல்லை
மரங்களின் பதினாறாம் நாள் என்றோ
கொண்டாடப்பட்டு விட்டது..

பறப்பது சிகப்பு நிற பக்கங்கள்
கீதையிலிருந்தும்
குரானிலிருந்தும்
விவிலியத்திலிருந்தும்
ஒன்றை ஒன்று முட்டி மோதி
பறக்கின்றன
மீதமிருக்கும் மனிதனிடம்
தான்தான் கருத்தை முதலில் சொல்லவேண்டும்
என்ற வெறியுடன்..

அவன் அறிந்திருக்கவில்லை
இல்லை
அறிவிக்கவில்லை

தான் உருவாக்கியதே
தன்னை அழி

மேலும்

அருமை தோழமை 27-Dec-2015 1:18 pm
சிறப்பான படைப்பு அண்ணா ~~~~````````` 15-Apr-2015 7:26 pm
உணர்வு பூர்வமான கவி.. வாழ்த்துக்கள் அன்பரே.. 13-Apr-2015 11:11 pm
மிக்க மகிழ்ச்சி ஐயா... இங்கே தான் உள்ளேன் ..... கொஞ்சம் வேலை சுமைகள் .... அதனால்தான் தளத்திற்கு சரியாக வரமுடியவில்லை...... 21-Mar-2015 1:55 pm
ஷர்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2015 10:41 am

(( தளத்தில் அனைத்து தோழமைகளுக்கும் நலம் என்று நம்புகிறேன்))


------- மனிதம் வெல்லும்-------

எங்கும் தெரிவது புகை மட்டும் தான்
நான் மட்டும் எதற்கு சுற்ற வேண்டும் என்று
பூமியும் நின்றுவிட்டது போல..

காற்றில் பறப்பதற்கு அங்கே இலைகள் இல்லை
மரங்களின் பதினாறாம் நாள் என்றோ
கொண்டாடப்பட்டு விட்டது..

பறப்பது சிகப்பு நிற பக்கங்கள்
கீதையிலிருந்தும்
குரானிலிருந்தும்
விவிலியத்திலிருந்தும்
ஒன்றை ஒன்று முட்டி மோதி
பறக்கின்றன
மீதமிருக்கும் மனிதனிடம்
தான்தான் கருத்தை முதலில் சொல்லவேண்டும்
என்ற வெறியுடன்..

அவன் அறிந்திருக்கவில்லை
இல்லை
அறிவிக்கவில்லை

தான் உருவாக்கியதே
தன்னை அழி

மேலும்

அருமை தோழமை 27-Dec-2015 1:18 pm
சிறப்பான படைப்பு அண்ணா ~~~~````````` 15-Apr-2015 7:26 pm
உணர்வு பூர்வமான கவி.. வாழ்த்துக்கள் அன்பரே.. 13-Apr-2015 11:11 pm
மிக்க மகிழ்ச்சி ஐயா... இங்கே தான் உள்ளேன் ..... கொஞ்சம் வேலை சுமைகள் .... அதனால்தான் தளத்திற்கு சரியாக வரமுடியவில்லை...... 21-Mar-2015 1:55 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) manimee மற்றும் 19 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jan-2015 6:45 pm

ஆதியிலே சாதிக்கு ஆதாம் ஏவாள்
------- அடிபணிந்து சென்றிருந்தால் இந்த நேரம்
பீதியிலே நாமெல்லாம் செத்துச் செத்து
------- பிணமேடாய் குவிந்திருப்போம்; மானுடத்தில்
பாதியிலே உயிர்ப்பெற்ற சாதி பேய்கள்
------- பாழ்படுத்தும் கொடுமைகளால் நம்மையெல்லாம்
வீதியிலே கத்தியோடு ஓட வைத்த
------- வெறித்தனங்கள் இனிமேலும் தொடரலாமா?

எத்தனையோ பிரிவினைகள் வளர்த்துக் கொண்டு
------- எதிரிகளாய் வாழ்வதிலே அர்த்தம் இல்லை
செத்தாலும் சவக்குழியில் சாதி பார்க்கும்
------- சாத்தானாய் நிற்பதிலே அர்த்தம் இல்லை
பெத்தவளை விடுதிக்கு அனுப்பிவிட்டு
------- பிரார்த்தனைகள் செய்வதிலே அர்த்தம் இல்லை
நித்தமொரு உதவி

மேலும்

ரசிப்பிற்கு மிக்க நன்றி நண்பரே... 18-Feb-2015 1:35 pm
சிறப்பு நண்பா , தங்களின் கவி நடையே தனி அழகுதான் , வாழ்த்துக்கள் 16-Feb-2015 10:52 pm
மிக்க நன்றி ஐயா... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... தங்களைப் போன்ற பெரியோர்களால் என் கவிதை வாசிக்கப் படுவதே என் பாக்கியமாக கருதுகிறேன்... எண்சீர் விருத்தம் தான் அய்யா.. 03-Feb-2015 12:41 pm
யுகபாரதி சிறப்பு விருதினைப பெறுவதற்கு இனிய வாழ்த்துகள். எண்சீர் விருத்தம் என்று நினைக்கிறேன். மிக அருமையான கருத்துகளுடனும், அருமையான புகைப்படத்துடனும் ஒன்றாம் தரமாக அமைந்த கவிதைக்கு என் இனிய பாராட்டுகள், ஜின்னா. 02-Feb-2015 7:36 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) Murali TN மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2014 1:30 am

அன்பான தளத் தோழர் தோழமைகளுக்கு வணக்கம்,

இது கவிதை அல்ல ஒரு கவிதைக்கான கருத்து அல்லது ஒரு கவிதையின் பார்வை....

25-12-2014 அன்று தோழர் ராம் வசந்த் "காற்றில் மிதக்கும் இறகு தேடல் -20" கவிதை எண்-226181 என்ற படைப்பை அளித்துள்ளார்...

முதலில் இறகின் பயணத்தில் அவர் இணைந்ததற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்....

இப்போது கவிதையின் கருவுக்குள் வருவோம்...

அவர் எடுத்துக் கொண்ட கரு அறிவியல் / எதிர்காலம் / இந்திய சந்தை....

முதலில் இந்த கருவை எடுத்து எழுதியமைக்கே அவருக்கு என் மனம் திறந்த பாராட்டுகள்...
ஏனெனில் இங்கு பல பேருக்கு அறிவிற்கும் அறிவியலுக்கும் உள்ள வித்தியாசம் எது என்பது இன

மேலும்

உண்மைதான் தோழரே... தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றிகள் பல... தங்கள் வருகையில் மிக்க மகிழ்ந்தேன்... 31-Dec-2014 10:48 am
திருத்தம்: படைப்பு வரிகளும் சிறப்பு என்று வாசிக்கவும். 30-Dec-2014 5:53 pm
கவிதையை படைப்பதும் படிப்பதும் சுலபம். அதற்குப் பலவிதமான கண்ணோட்டத்தில் விமர்சனங்களை வழங்குவது என்பது கொஞ்சம் சிரமமான வேலைதான். அதை திறம்படச் செய்து முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ”இறகுதிர்ந்த பறவை பலம் குறைந்து சரியும் வேளைகளில் சரியாக உணர்ந்திருந்தது. தரைதட்டி விட்டால் பறப்பன ஊர்வனவாகிவிடும்...........” படைப்பு வருகளும் சிறப்பு. 30-Dec-2014 5:51 pm
மிக்க நன்றி தம்பி... தங்கள் வரவில் மகிழ்ந்தேன்... 30-Dec-2014 4:59 pm
ஷர்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2014 10:35 am

....காற்றில் மிதக்கும் இறகு ----தேடல் - 12....

பல இறகுகள் இங்கே மிதக்க...

பலமற்ற கிளையின் படபடப்பால்
படபடத்த பறவையின் சிறகிலிருந்து
பலியாய் மிதக்க துவங்கியது
மற்றும் ஓர் ஒற்றை இறகு...

பாதை அறியாமல்
மிதந்த இறகு
கண்விழித்த போது..

அங்கு ஒருவன்
முள் வேலிகளுக்குள்
நாய்கள் உடன்
உணவுச் சண்டையில்...

பிறப்பறியா மிருகம்
பிறப்புறுப்பில் கடித்ததினால்
பிணமாகி போன
உயிர் உள்ள சிறுமி...

உறவு தொலைத்த
குழந்தை ஒன்று
கையில் குவளையுடன்
குடிநீருக்கான நீண்ட வரிசையில்..

உயிர்தானம் செய்ய முயலும்
மாணவன் கையில்
சென்ற ஆண்டு வாங்கிய
முதல் மதிப்பெண் சான்றிதழ்..

உடம்பு சிலையா

மேலும்

ஆழ்ந்த கருத்துள்ள படைப்பு 26-Mar-2015 12:58 pm
ஆழமான தேடல் 20-Jan-2015 5:30 pm
கவியின் கரு அருமை நண்பா!!! 20-Jan-2015 5:01 am
மிக்க மகிழ்ச்சி நட்பே... 05-Jan-2015 10:29 am
ஷர்மா - எண்ணம் (public)
11-Dec-2014 10:35 am

இன்று தமிழ் முண்டாசுக் கட்டி
மண்ணில் முளைத்த நாள்..

நாளைய தினம் யார் பிறந்த நாள் என்று அனைவருக்கும் நியாபகம் இருக்கும்.....

இன்று தமிழுக்கு பிறந்த நாள் என்று எத்தனைபேருக்கு
நியாபகம் இருக்கும்......?????

மேலும்

ஷர்மா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2014 10:45 am

----------- தீப திருநாள்--------------

விளக்குகளின் கவிதை நடனம்
விளக்குகள் காதல் பேசும் தினம்
கார்த்திகை தீப திருநாள்..!

--------------------------ச.ஷர்மா

(அனைத்து தோழ ,தோழி , தோழமைகளுக்கும் என்
இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்..)

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 05-Dec-2014 8:07 pm
புதிய நண்பனின் வருகையில் மகிழ்ச்சி.....ன் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்த்துக்கள்.. 05-Dec-2014 1:30 pm
அண்ணானுக்கும் என் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்த்துக்கள்... 05-Dec-2014 1:29 pm
நான் உங்கள் புதிய நண்பன்.தோழர் தோழிகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள் 05-Dec-2014 1:12 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Nov-2014 1:03 am

[ முன் குறிப்பு : இது படைப்புக்கான படம் அல்ல.. படத்திற்கான படைப்பே ]

உன் பார்வை ஒளிப்பட்டு
என் விழிகளில் விடியல் தொடங்கி
என்னையே பிரகாசித்த
அந்த ஒரு
எழுச்சி கொண்ட ஏகாந்த இரவு...

இருப்பின் அச்சத்தை
நீ அருகில் இருந்ததாலேயே
அறியப் படாமல்
என்னையே தொலைக்கத் துணிந்த
அந்த ஒரு
அச்சமற்ற ஆனந்த இரவு...

நீ தொட்ட
தொட நினைத்த
நீ பார்த்த
பார்க்க நினைத்த
பாகங்களின் ஸ்பரிசங்கள் எல்லாம்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்த
அந்த ஒரு
பௌர்ணமியின் பின்னிரவு...

விரல் தொட்ட நொடியில்
உயிர் தொட்ட உணர்வில்
வெட்கத்தின் சிறு வலியில்
கன்னத்தோடு சேர்ந்து இந்த
கன்னியே சிவந்த நா

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:28 pm
தோழரே!! என்ன சொல்வது உங்கள் புலமைக்கு அருமை என்று ஒரு வார்த்தையால் சொல்லி விட்டு விடவும் முடியாமல் தவிக்கின்றேன் 05-Jun-2015 11:20 pm
மிக்க நன்றி தோழரே... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி... 23-Dec-2014 5:14 pm
சிறப்பு 23-Dec-2014 2:19 pm
ஷர்மா - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2014 9:57 am

என்னம்மா இப்டி பண்ணீட்டீங்களம்மா....!!

மேலும்

ஜின்னா அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Nov-2014 1:08 pm

முன் குறிப்பு : தம்பி ஷர்மாவின் கவிதையை கொஞ்சம் சந்தத்தோடு மாற்றி எழுதியது...
================================================================================

நிலவின் ஒளியும் தெளிவாய் தெரியும்
----------அன்பே உந்தன் கருவிழியில்..! - உன்
மலரும் முகத்தின் அழகை சொல்ல
----------வார்த்தை இல்லை தாய்மொழியில்..!

புருவம் கொஞ்சம் அசைவதை கண்டால்
----------அய்யோ எனக்குள் யுத்தமடி..! - உன்
உருவில் கூட சோகம் என்றால்
----------நெஞ்சில் ஏதோ சத்தமடி..!

கோடை வெயிலில் தனியும் தாகம்
----------உன்னை கண்டால் எனக்குள்ளே..! - பெரும்
வாடைக் குளிரை அனலாய் மாற்றும்
---------சக்தியும் உண்டோ

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:29 pm
மிக அருமையாக எழுதி உள்ளீர் அழகான ஓசையுடன் ஆழமான காதலுக்கு பாடல் எழுதி உள்ளீர் வாழ்த்துக்கள் 06-Jun-2015 10:55 am
மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் வழங்கிய கருத்திற்கும்.... 02-Dec-2014 1:05 pm
சாரல் மழையின் துளியில் கூட ----------அழகாய் தெரிவது உன்முகமே..! - அதை ஓர விழியின் உள்ளே வைத்து ----------ஒட்டிக் கண்டது என்மனமே..! அருமை தோழமையே! தங்கள் கற்பனையில், அது கொண்ட பொருளில் தான் எத்தனை அழகு! வாழ்த்துக்கள். கவிதை மிகவும் பிடித்தது. காமம் அறிய காதல் செய்யும் ----------கற்பு கலைந்த உலகமிது - இதில் காமம் இல்லா காதல் செய்வோம் ----------கண்ணே சொல்உன் கடமை இது 02-Dec-2014 12:28 pm
MSசுசீந்திரன் அளித்த எண்ணத்தை (public) ஜின்னா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Nov-2014 10:38 pm

நதி நனைவதில்லை

ஒருமழைக் காலத்தில்
உன்னோடு கரம் சேர்த்து
நாம் நடந்த அந்த நாட்களை
நீ மறந்து போயிருக்கலாம்
அது எனக்கு
இரவு நேரத்து நிலாக் காலம்
ஆகாயத்தில்
வான வியாபாரி
வைரங்கள் விற்ற போது
நானுன் மூக்குத்தி வெளிச்சத்தில்
மிளிர்ந்து ஜொலித்தேன்.....
அருவி எழுப்பிய ஜலதரங்கம்
ஏனோ என் காதுகளுக்கு எட்டாமல்
உன்கால் கொலுசொலியில்
காவியம் படித்தேன்......
சந்திரனும் சூரியனும்
சங்கமிக்கும் இடம்
உன்முக வட்டதில்தானே
ஒரு சிவப்பு குங்குமமாக
ஒரு மூன்றாம் பிறை நெற்றியாக (...)

மேலும்

மலையருவிச் சாரல் நீங்கள் ........மழைக்காக ஒதிங்கி நிற்பவன் நான்........நன்றி கவிஞரே..... 11-Nov-2014 9:01 pm
கருத்திட்டமைக்கு நன்றி. 11-Nov-2014 8:59 pm
நன்றி தோழமையே . 11-Nov-2014 8:58 pm
நன்றி நண்பரே . 11-Nov-2014 8:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (128)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவர் பின்தொடர்பவர்கள் (128)

சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
ஜெய்ஸி

ஜெய்ஸி

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (128)

user photo

samreen banu

vellore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே