ஜெய்ஸி - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : ஜெய்ஸி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 21-Nov-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 857 |
புள்ளி | : 153 |
இணை இயக்குநர், தமிழ் திரைப்படத்துறை jaisee3@gmail.com
தன் வாழ்வை போலவே கசங்கிய வெள்ளை காகிதத்தில் எழதத்தொடங்கினான், பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் அந்த சிறுவன்.......
பசித்த வயிற்றோடு இருக்கையில் ரொட்டித்துண்டுகளை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் புன்னகையோடு எடுத்துத்தருகிறேன்
உடைந்து நொறுங்கிய தூள்களை பிறகு சாப்பிட்டுக்கொள்வேன்
செம்பட்டை நிறத்தில் சிக்குத்தலையுடன் நிற்கும் என்னிடம் தேங்காய் எண்ணையை எடுத்து தரச்சொல்லி விரல்நீட்டுகிறார்கள் புன்னகையோடு எடுத்துத்தருகிறேன் சிந்தியிருக்கும் மீதியை எடுத்து பிறகு தடவிக்கொள்வேன்
சுமை இறக்கிவைக்கையில் பட்ட காயத்தோடு இருக்கிறேன் புண்ணிற்கு ஒட்டும் ஒரு மருந்துப்பட்டையை எடுத்து தரச்சொல
துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் காதல் வருமெனில்,
நெற்றியில் இரண்டு தோட்டாக்கைள வாங்கிக்கொள்ளலாம் பரவாயில்லை...!!! ❤
உன் பெரும் கோபங்களை கரைக்க மெல்ல பேசி பேசி
உனக்கே தெரியாமல் உன்னை சமாதானம் செய்து அமைதியாக்குவதை,
பெருவிரல் சூப்பி அழகாய் உறங்கும் குழந்தையின்
விரலை மெதுவாய் எடுத்துவிடுவதை போலவே உணர்கிறேன்
உன் பெரும் கோபங்களை கரைக்க மெல்ல பேசி பேசி
உனக்கே தெரியாமல் உன்னை சமாதானம் செய்து அமைதியாக்குவதை,
பெருவிரல் சூப்பி அழகாய் உறங்கும் குழந்தையின்
விரலை மெதுவாய் எடுத்துவிடுவதை போலவே உணர்கிறேன்
அடித்து பிடித்து
பேருந்தில்
ஏறியதிலிருந்தே
வைத்த கண் வாங்காமல்
சொக்கிபோகிறாய் என்னழகில்...!!!
இது " லேடீஸ் சீட்" எனக்கூறி
சினிமா வில்லன் போல்
அமர்திருந்த ஒருவரை எழுப்பி
அவர் முறைப்பை வாங்கிகொண்டு
நான் அமர இடம் பிடித்தாய்...!!!
வயதான பெரியவருக்கு
உன் இருக்கையை
தருகிறாய்...!!!
படிக்கட்டில்
பயணிப்பவர்களை
மென்மையாக
எச்சரிக்கிறாய்....!!!
பெண்கள் நிற்க
இடம் ஒதுக்கி
தருகிறாய்
விரல் சூப்பும் குழந்தையின்
கட்டை விரலை
எடுதுவிடுகிறாய் .......!!!
இவற்றுகிடையே
அவ்வபொழுது
வேறு எங்கோ பார்த்தப
“கொலைப்பாதகர் கூட்டமது
கள்வர்களின் உறைவிடமது...
மாண்டவன் மீள மாட்டான்...
நீ சென்றால் தாங்க மாட்டாய், திரும்பி வா அஞ்சுகமே..”
தொலைதூரம் போனவளொருத்தியின்
விட்டு விட்டொலித்த கேவல்
ஏக்கமாய் நெஞ்சை பிசைய,
குயிலொன்று இப்படி தான்
அதன் மொழியில் கூவிக்கொண்டிருந்தது...
கொலைக்களம் இதுவென அறிந்திடா மடந்தையல்ல...
பாதகர் கண்டு பதறியோடும் பரம்பரையில் பிறந்தவளுமில்லை...
தந்திரமாய் வஞ்சிக்கப்பட்டவனின் மாசுமருவில்லா மகிழம்பூ அவள்...
விதி தேடி வந்தாளோ?
வினை விதைக்க வந்தாளோ?
அங்கே கிழ நாயொன்று பலஹீனமாய்
ஊளையிட்டுக் கொண்டிருந்தது...
நரிகளின் நடமாட்டம் இருளினில் மின்ன,
கண்கள் விரித
நான் எனக்காக அழுதபோது
எனக்கென்று யாருமில்லை , ஆனால்
உனக்காக அழுதபோது
உன்னோடு தான் இருந்தேன்......!!!!
உன் கையில் ஊசியும்
என் கையில் நூலும்
கிழிந்த உடையாய் நம் காதல்...... !!!!