வாகை வென்றான் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வாகை வென்றான் |
இடம் | : யாதும் ஊரே |
பிறந்த தேதி | : 08-Feb-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-May-2011 |
பார்த்தவர்கள் | : 1058 |
புள்ளி | : 446 |
புரியும்வரை புதிர்,
புரிந்த பின்னரும் புதிர்தான்.
வெறுப்பதை காட்டிலும்
விலகுவதே சிறந்தது.
மன்னிப்பதை காட்டிலும்
மறப்பதே சிறந்தது
vendraan1985@gmail.com
நீ இன்றி நான் இல்லை
அனைவரும் கூறுவது போல் இருக்கின்றதா
விளக்கமாக சொல்கிறேன் கேள்
நீ இன்றி பேச ஏதும் இல்லை என்னிடம
உனை இன்றி ஒரு கவிதை இல்லை என்னிடம்
உன் பார்வை இன்றி நாணம் இல்லை என்னிடம்
உன் நினைவின்றி மனம் இல்லை என்னிடம்
உன் வாசம் இன்றி சுவாசம் இல்லை என்னிடம்
உன் மொழி இன்றி செவி இல்லை என்னிடம்
உன் நிழல் இன்றி பயணம் இல்லை என்னிடம்
உன் கைகள் இன்றி ரேகை இல்லை என்னிடம்
உன் பிம்பம் இன்றி பார்வை இல்லை என்னிடம்
உன் விருப்பம் இன்றி வேறில்லை என்னிடம்
உன் இடம் இன்றி வேறிடம் இல்லை என்னிட
எண்ணம் யாவுமுனை
என்னும் நாளில், வினை
தன்னால் தீருமென
கண்டேன் விநாயகனே !
கண்ணீர் யாவுமுனை
கண்டால் வழிகிறதே !
கரும வினைகளதில்
கரைந்தே மறைகிறதே!
எல்லாம் இழந்தவனை
இன்பம் தொலைத்தவனை
இன்புற்றிருத்திடவே...,
என்றும் அருள்பவனே !
எங்கள் விநாயகனே !
செய்யார்.செயலறியார்
செய்யாமல் தானறியார்
செய்யும் செயர்சிறக்க ,செய் !
செயற் முதற்கடலே!
தர்மம் தழைத்தோங்க
தரணியில் நிலைத்தோங்க,
தந்தம் தானொடித்து
தந்தாய் பாரதத்தை.
தர்மம் மறந்துவிட்டோம்
தடம்புரண்டு வாழ்ந்துவிட்டோம்
தரித்திரம் தலைவிரிக்க-
தஞ்சமென தேடிவந்தோம்!
பகட்டு வாழ்க்கையிலே
பாதை மாறிவிட்டோம்
பண்பை இழந்துவ
கண்ணிமைக்கும் நேரத்தில்
நீ வந்துபோகிறாய்
அதுவும் கனவு என்று
தெரிந்தபின்னே நான்
உடைந்துபோகிறேன்.
எங்குனை தேடிநானும்
கண்டுகொள்ளவோ
என் இதயத்தில்
இருந்ததையறிந்து
மனதைத் தேற்றினேன்.
உன் பாதச்சுவடு
பார்த்து நடந்தபோதே
நீயும் பறந்துபோகிறாய்
நீ பறந்துபோனதாலே
நானும் பாதை மாறினேன்.
என் வாழ்க்கைப்பாதை
கண்டுகொள்ள வழியுமில்லையே.
எந்தன் வழிகள் யாவும்
உந்தன் விழியால்
நீ திருடிப்போனதால்.
குழப்பத்தில் எழுதும்போது
குறைகள் நேரலாம்.
குறையில்லா வாழ்க்கை
உலகில் எங்குமில்லையே.
இலைகளைத் தொட்டால்
சுருங்கும் தொட்டாஞ்சிணுங்கிபோல்
பார்வைகளால தொட்டவுடன்
இமைச் சுருங்கிப்போகும்
தலைத் திரும்பியே…
நான் என்ன
தீண்டத்தகாதவனா பார்வைகளால்…
திரும்பிய தலையும் மூடிய இமைகளும்
இயல்பு திரும்பும்வரை காத்திருக்கிறேன்
கண்களால் உன்னை மீண்டும் தீண்ட.
நாள்தொறும் இது தொடர்ந்தாலும்
எனக்கு சளைத்துவிடவில்லை. இந்த
தொடுதல் சுருங்குதல் விளையாட்டு.
உனக்கும் அப்படியே என்று நம்புகிறேன்!
உன் கண்களைக் கண்டேன்
என்னுள் காதல் கொண்டேன்
உன் புருவம் கண்டேன்
என் மனதுள் உன் உருவம் கொண்டேன்
உன் கண்ணுக்குள் இருக்கும் விழி
என் மனதை உடைத்த உளி
இரு கண்களுக்கிடையே ஒரு வண்ணப்பொட்டு
என் இதயத்தைக்கிழித்தாய் ஒரு அம்புவிட்டு........
காத்திருந்தே காலம் போனதென்ன?
ஏமாத்தும் பயமக்கா
எப்படியும் வாழ்வதென்ன?
ஊருக்கு துரோகமில்லாம
ஒறவுக்கு கோவமில்லாம
ஒழச்சு வாழ ஒழவ நம்பி
ஓயாம பாடுபட்டு
ஊருக்கே சோரு போட்ட கை
இன்று
உசுர கையிலபுடிக்க
நான்கொடுத்த உசுரையும்
எனக்கு உசுரக்கொடுத்த
உசுரையும் காப்பாத்த,
கால்பதிச்ச வெள்ளாமையும்
காணம போவதென்ன?
காவேரிகாஞ்சு போச்சு
மணலல்ல வசதியாச்சு
காலமழை கானலாச்சு
காலன்கையில் விவசாயம்போச்சு
காலடியில் கெடச்சதண்ணி
கார்ப்ரேட் ஓட்டைபோட்டு
உசுரபோல உரிஞ்சிரிச்சு
கவுர்மென்டுக்கு காசாச்சு
தண்ணி காணம போயாச்சு
மண்ணுக்கு தண்ணி வேணும்னு
மக்களெல்லாம் வேண்டிநின்னா
அவனும் மப்படிச்சு கெ
காதல் எனும் சிலுவையால்
என்னை நானே அறைகிறேன்
காலம் முழுதும் வாழ்விலே
காணாமல் போகிறேன
உனக்கான தேடலில்
நான் தொலைந்து போகின்றேன்
என்னை மீண்டும் தேடினால்
அங்கு உனை காண்கிறேன்
நீங்காத ஞாபகம்
நித்தம் என்னை கொல்லுதே
நீ வந்த கால்தடம்
நெஞ்சில் அழியவில்லையே
கண்ணீரின் வார்த்தைகள்
காயம் தரும் கண்மனி
உன் முன்னே சிரிக்கிறேன்
உனைப்பிரிந்து அழுகிறேன்
நான்கொண்ட காதலே
உண்மை காதல் என்பதால்
தன்னந்தனியான காட்டினிலே
என்னை தவிக்கவிட்டான் ஒரு பாவியடி
இந்த பாவியில்
பா என்றால் பார்வைதான்
வி என்றால் விளையாட்டு
அவன் பார்வையால் விளையாடும் கள்வனடி
அவன் பார்வையால் எனை வெல்லும் மன்னனடி
அவன் குழலூதூம் இசையாலே
மகிழ்விப்பான் மனதைத்தான்
அவன் கூட இருந்தாலே போதுமடி
எனக்கு வேறென்ன இவ்வுலகில் வேண்டுமடி
என் தோழி நீயும்தான் கேளடியே
என்னை அவனும்தான் படுத்திய பாட்டினையும்
ஒருநாளில் வரச்சொன்னான்
நான்சென்று போய் நின்றேன்
அவனைகாணவில்லை நெடுநேரமடி
நான் காத்திருந்தேன் காத்திருந்தேன்
காத்துக்கொண்டே இருந்தேன்
அவன் காணோமடி வரக்காணோமடி
அவனை காணமல் கோபம்தான்
காத்திருந்த சோகம்தான்
என
ஓஷோ சிந்தனைகள்
******************************
கடவுள்உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாத படி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்.
**********
முட்டாள்தனமானவர்கள் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்கள்.எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஜடமாகத் திரிவார்கள்.வாழ்வின் சிறப்பை வாழ்ந்து பார்க்க முயற்சிக்க மாட்டார்கள்.அவர்களிடம் தீவிரம் இருப்பதில்லை.இந்த சமூகம் நீ முட்டாளாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது.
**********
எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப் படுமுன் மும்முறை நினைத்துப்பார்.உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99% தேவையற்றதாகவே இருக்கும்.அ
புத்தம் புது காலையில்
புதிய பயணம் போனேன்.
கண்கவர் மலர்கள் காண
விழி ஏங்கியது
வானுயர்ந்த மரம் காண
மனம் ஏங்கியது
வீசும் காற்றில்
கண்ணயர விழிகள் ஏங்கியது
துளிர்க்கும் மரங்களை
கோடாரி கொண்டு
கொன்று போடுபவர்களைதான்
கண்டேன்.
இன்ச் இஞ்சாக இப்படியே
கொன்றால்
இயற்கையும் ஒருநாள்
இயற்கை எய்திவிடும்.
அதை பார்த்து
கண்ணீர் சிந்த
மழையும் இல்லாமல் போகும் .