அதிர்ஷ்டக்காரி

இங்க பாரு என் வீட்டுக்காரர் தீபாவளிக்கு
1000 ரூபாய்க்கு சேலை எடுத்து கொடுத்தார் என்று எடுத்துக் காட்டினாள், பக்கத்து வீட்டு தோழி. அவளோட காட்டான் புடவையை நன்றாகத்தான் இருக்கிறது என்று, உண்மையை சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தேன்.

என் கணவரிடம் வந்து சொன்னேன்
என்னங்க தீபாவளிக்கு பக்கத்து வீட்டுக்காரி பட்டு சேலை எடுத்துட்டாலாம், எனக்கு இதுக்கு மேலயும்
நீங்க சேலை எடுத்து தரலைனா நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன்.

அதற்கு அவர் சரி சரி வா போகலாம் என்று உடனே கூட்டிப் போனார்.

கடைக்குள் சென்றவுடன் சரி சரி நல்ல ஒரு பட்டு சேலை எடுத்துக்கோ என்றார்,உடனே நான் பட்டு சேலையா என்று வியந்தேன். ஆமா, நீதானே சொன்னே பக்கத்து வீட்டுக்காரி பட்டு சேலை எடுத்துட்டாலாம் என்று. அப்புறம் வீட்டுக்கு போனவுடனே பட்டு சேலை வேணும்னா திரும்பியெல்லாம் கடைக்கு வரமுடியாது என்றார்.

அப்போதுதான் யோசித்தேன் நான் சொன்னதை,

எழுதியவர் : வென்றான் (21-Oct-11, 6:47 pm)
பார்வை : 1929

மேலே