சந்தோசமாய் உள்ளது!!!
அன்றுதான் புதிதாக குடி வந்தேன்.
ஒரு நாள்,!
அந்தி சாயும் வேளையில்,அழகான அந்த
சிவந்த வானத்தை காண, வீட்டின் மாடிக்கு சென்றேன்.
கண்டேன்.சிவந்த வானத்தை அல்ல,அதைக்காட்டிலும்
அழகான அவளை.தொடர்ந்து பார்க்க ஆசைப்பட்டேன்.
ஆம் அவள் விழிகளில் ஏதோ ஒரு ஏக்கம்.
அவள் ஏக்கத்திற்கு காரணத்தை அவள் வயது காட்டியது.
ஒரு நாள் நான் அவளை சந்தித்த வேளை,
அவள் தந்தை என்னை பார்த்துவிட்டர்.
மறுநாள் காலை பொழுது, அவள் வீட்டின் முன்பு
மணகோலத்தில் இருவர் தெரிந்தனர்.
வியப்போடு அருகில் சென்றேன்.
அவள் என்னை பார்த்ததும்,அவள் விழியோரங்களில்
ஆனந்த கண்ணீர். அதே வேளையில் அவள் தந்தை
கூறிய வார்த்தைகள்,கண்டவன் பார்க்க என் பெண்னை விட்டுவிடுவேனா!!.
பிறகுதான் தெரிந்தது,திருமண வயதை தாண்டிய அவளுக்கு,
என்னால்தான் திருமணம் ஆனது என்று!!!.