காத்திருந்தே காலம் போனதென்ன விவசாயம்

காத்திருந்தே காலம் போனதென்ன?
ஏமாத்தும் பயமக்கா
எப்படியும் வாழ்வதென்ன?
ஊருக்கு துரோகமில்லாம
ஒறவுக்கு கோவமில்லாம
ஒழச்சு வாழ ஒழவ நம்பி
ஓயாம பாடுபட்டு
ஊருக்கே சோரு போட்ட கை

இன்று

உசுர கையிலபுடிக்க
நான்கொடுத்த உசுரையும்
எனக்கு உசுரக்கொடுத்த
உசுரையும் காப்பாத்த,
கால்பதிச்ச வெள்ளாமையும்
காணம போவதென்ன?

காவேரிகாஞ்சு போச்சு
மணலல்ல வசதியாச்சு
காலமழை கானலாச்சு
காலன்கையில் விவசாயம்போச்சு
காலடியில் கெடச்சதண்ணி
கார்ப்ரேட் ஓட்டைபோட்டு
உசுரபோல உரிஞ்சிரிச்சு
கவுர்மென்டுக்கு காசாச்சு
தண்ணி காணம போயாச்சு

மண்ணுக்கு தண்ணி வேணும்னு
மக்களெல்லாம் வேண்டிநின்னா
அவனும் மப்படிச்சு கெடக்கிறான் போல
வேண்டுனது புரியாம
வெவரமெதூம் அறியாம
கண்ணுக்கு தண்ணிதந்து
காலமெல்லாம் அழவச்சான்

அம்மா செத்தா சின்னம்மா
தலைவருக்கு முடியலனா செயல்தலைவர்
எல்லாருக்கும் ஒருவழிவச்ச
ஏழவிவசாயிய மட்டும் தெனம் அழவைச்ச
விவசாய கடன் தள்ளுபடின்னு
ஓட்டுகேட்டு நிக்கவச்ச
ஓட்டுபோட்ட பின்னாடி
வட்டி மட்டும் தள்ளுபடின்னு
வாயடச்சு நிக்கவச்ச

ஓடிப்போய் பொழைக்க
ஒரு பொழப்பும் தெரியாதே
தெரிஞ்சு பொழச்சுகலாம்னாலும்
இந்த மண்ணவிட்டுபோக மனசு வல்லே
என்னமோ நடக்கட்டும்
ஏழபொழப்பு ஊர்சிரிக்கட்டும்
மண்ண நம்பி பொழப்ப வைச்ச
மறைஞ்சு நிக்கும் பெருஞ்சாமி
பொழைக்க வச்சா
மண்ணுமேல நிப்போம்
இல்லையினா
மண்ணுக்கு கீழ கெடப்போம்
மண்ணில்லா வாழ்க்கைய
மறந்துகூட நெனக்கமாட்டோம்.

எழுதியவர் : வென்றான் (1-Feb-17, 1:07 am)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 72

மேலே