வந்திடுமா தூய்மையுமே

நாடுகின்ற இடமெல்லாம்
----- நாற்றங்கள் வீசுவதால்
ஓடிநாமும் ஒளிந்துகொண்டு
------ ஒழிக்கின்றோம் உயிர்களையும் .
பாடுபட்டு வளரவேண்டும்
------ பசுமையான சமுதாயம் .
வீடுகளின் குப்பைகளை
------- வீதியிலே தள்ளாதீர் !!!!


காடுவாழும் விலங்கினத்தின்
------ கண்ணியத்தைக் காத்தலுமே
நாடுவாழும் மனிதரினம்
------- நம்மிடையே இல்லையிங்கே !
மாடுகளின் உணவல்ல
------- மானிடரின் கழிவுகளே !
வாடுகின்ற செய்கையிலே
------- வந்திடுமா தூய்மையுமே !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Feb-17, 9:51 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 36

மேலே