மாதத்தின் முதல் நாள் --- மரபு கவிதை

மாதத்தின் முதல்நாளில்
------ மகிழ்ச்சியுடன் இன்பங்கள் !
வாதத்திற்கு வழியில்லை
------- வளமைக்கும் குறைவில்லை .
பாதங்கள் தரைபாவாப்
------- பாரினிலே சந்தோசம் !
மாதமது முடிந்தாலோ
------ மனசெல்லாம் கவலைகளே !


சம்பளத்தை வாங்குகின்ற
------- சம்சாரி என்செய்வான் .
அம்பலமே ஆகிவிடும்
------ ஆறுதேதி முடிந்தபின்னே !
வம்புகளும் வழக்குகளும்
------- வந்திடுமே குடும்பத்தில் .
அம்புபோன்ற சொற்களுமே
------- ஆதாரமாய் நின்றுவிடும் !


முதல்தேதி வந்தாலோ
------- முகத்தினிலே புன்னகையே !
நுதல்போல துன்பங்கள்
------- நுழைவதில்லை வீட்டினிலே !
பதமான உரையாடல்
------- பாந்தமான இல்லறமே
இதமான வாழ்க்கையிலே
------- இனித்திடுமே முதல்வாரம் !!!



ஆறுநாட்கள் சென்றபின்னே
-------- அல்லல்வரும் கடனாலே
மாறுதலும் இல்லாமலே
------- மானிடனும் முழித்திடுவான் .
பேறுகால மங்கைபோல்
------- பெரியதுன்பம் அடைந்திடுவான் .
ஆறுதலும் சொல்லுதற்கு
------- அவனியிலே யாருமில்லை .


கடைசிதேதி வந்தாலே
------- கைகளிலே காசியில்லாத்
தடைகளுமே வந்தடையும் .
------- தரமான சிக்கனத்தால்
படைகொண்டு முறியடிக்க
------- பக்குவத்தைப் பெறவில்லை .
விடையாகச் சொல்லுகின்றேன்
-------- விரைந்துநீங்கள் சேமிப்பீர் !!!!



ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Feb-17, 10:13 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 47

மேலே