நீ இன்றி நான் இல்லை

நீ இன்றி நான் இல்லை
அனைவரும் கூறுவது போல் இருக்கின்றதா
விளக்கமாக சொல்கிறேன் கேள்

நீ இன்றி பேச ஏதும் இல்லை என்னிடம

உனை இன்றி ஒரு கவிதை இல்லை என்னிடம்

உன் பார்வை இன்றி நாணம் இல்லை என்னிடம்

உன் நினைவின்றி மனம் இல்லை என்னிடம்

உன் வாசம் இன்றி சுவாசம் இல்லை என்னிடம்

உன் மொழி இன்றி செவி இல்லை என்னிடம்

உன் நிழல் இன்றி பயணம் இல்லை என்னிடம்

உன் கைகள் இன்றி ரேகை இல்லை என்னிடம்

உன் பிம்பம் இன்றி பார்வை இல்லை என்னிடம்

உன் விருப்பம் இன்றி வேறில்லை என்னிடம்

உன் இடம் இன்றி வேறிடம் இல்லை என்னிடம்

உன் விழிகள் இன்றி கனவுகள் இல்லை என்னிடம்

உன் கால்தடம் இன்றி காலம் இல்லை என்னிடம்

உன் போல ஒரு ஓவியம் வரைய கலைகள் இல்லை என்னிடம்

உன் உறவின்றி உயிர் இல்லை என்னிடம்

உன் காதல் இன்றி நானே இல்லை என்னிடம்


  • எழுதியவர் : நான்
  • நாள் : 21-Aug-17, 12:17 pm
  • சேர்த்தது : Kavitha
  • பார்வை : 1047
  • Tanglish : nee indri naan illai
Close (X)

0 (0)
  

மேலே