Rajesh 03 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Rajesh 03 |
இடம் | : Karur |
பிறந்த தேதி | : 26-Jan-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Nov-2011 |
பார்த்தவர்கள் | : 2471 |
புள்ளி | : 813 |
அனைவருக்கும் வணக்கம்
என் பெயர் ப.ராஜேஷ்
எனது ஊர் கரூர்
படிப்பு துகிலியல் (textile technology) & Merchandising
mobile:9751004031
எனது பாதிப்புகளை இங்கே வடித்துள்ளேன்
வலிகளின் வரிகளாக ......
திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுத வேண்டுமென்பதும் ,என் கவிதைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்பதும் நிறைவேறா என் நீண்டநாள் கனவு ...............
நான் கவிஞர் ந. முத்துக்குமாரின் தீவீர விசிறி ......
மற்றபடிஎன்னைப் பற்றி சொல்லிக்கொள்ள
பெரிதாக ஒன்றுமில்லை .
முன்னுரை:
***************
உன் தாயக் கண்களை
உருட்டிக் கொண்டேயிருக்கிறாய்
ஒற்றைத் தாயமாக நான் விழ விழ...
******
எந்த மரங்களின் கீழிருந்தும்
இமைகளை மட்டும் விசிறி விடாதே
பூக்களற்றுப் போகின்றன மரங்கள்.
******
உன்னை வரைகிறேன்,
கண்கள் மட்டும் மீதமிருக்கிறது,
உன் பார்வைக்காக.
******
என்முறை:
**************
வண்ணத்துப் பூச்சியின்
கால் தடங்களை நுகர்ந்தே வருகிறேன்
உன் இருப்பிடம் தேடி.
******
நீயாகவும் அழைக்கவில்லை,
நானாகவும் வரவில்லை,
அழைத்து வந்த காதலோ
எனக்குள் ஒளிந்து கொள்கிறது.
******
என்னிலும் வாய் பிளந்து நிற்கிறது
அந்தத் தேனீர்க் கோப்பை
அதனிடம் எச்சரி
எங்கிருந்து வருகிறாய் !
ஏன் என்னில் நிறைகிறாய்!
மண் முழுதும் வாசம் கூட்டி !
மனம் முழுதும் பொழிகிறாய்!
கடவுளைப் போல் வருகிறாய் !
காதலியைப் போல் விரைகிறாய் !
ப .ராஜேஷ்
இனி விடியல் இல்லை எனத் தெரிந்தும்
கதிரவனை எதிர்பார்க்கிறேன் ....
உன் மனதில் நானில்லை என அறிந்தும்
உன்னையே நினைந்திருக்கிறேன்......
வார்த்தைகள் பேசத் தெரியாத மழலையாகிறேன்
உன்னிடத்தில் .....
வாழ்க்கை முழுதும் எப்படி வாழப் போகிறேன்
உன்னிடம் சொல்லாத காதலை வைத்துக்கொண்டு
இவ் வுலகத்தில் !
உண்மையைச் சொல்லி காதலிக்க
ஆசைப் பட்டேன் ........
இன்றுவரை
கிடைக்கவில்லை
காதலி .......