தொட்டால் சிணுங்கி

இலைகளைத் தொட்டால்
சுருங்கும் தொட்டாஞ்சிணுங்கிபோல்
பார்வைகளால தொட்டவுடன்
இமைச் சுருங்கிப்போகும்
தலைத் திரும்பியே…

நான் என்ன
தீண்டத்தகாதவனா பார்வைகளால்…
திரும்பிய தலையும் மூடிய இமைகளும்
இயல்பு திரும்பும்வரை காத்திருக்கிறேன்
கண்களால் உன்னை மீண்டும் தீண்ட.

நாள்தொறும் இது தொடர்ந்தாலும்
எனக்கு சளைத்துவிடவில்லை. இந்த
தொடுதல் சுருங்குதல் விளையாட்டு.
உனக்கும் அப்படியே என்று நம்புகிறேன்!

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (31-Jan-17, 10:47 pm)
பார்வை : 103

மேலே