கண்ணிமைக்கும்

கண்ணிமைக்கும் நேரத்தில்
நீ வந்துபோகிறாய்
அதுவும் கனவு என்று
தெரிந்தபின்னே நான்
உடைந்துபோகிறேன்.

எங்குனை தேடிநானும்
கண்டுகொள்ளவோ
என் இதயத்தில்
இருந்ததையறிந்து
மனதைத் தேற்றினேன்.

உன் பாதச்சுவடு
பார்த்து நடந்தபோதே
நீயும் பறந்துபோகிறாய்
நீ பறந்துபோனதாலே
நானும் பாதை மாறினேன்.

என் வாழ்க்கைப்பாதை
கண்டுகொள்ள வழியுமில்லையே.
எந்தன் வழிகள் யாவும்
உந்தன் விழியால்
நீ திருடிப்போனதால்.

குழப்பத்தில் எழுதும்போது
குறைகள் நேரலாம்.
குறையில்லா வாழ்க்கை
உலகில் எங்குமில்லையே.

எழுதியவர் : வாகை வென்றான் (20-Jul-17, 3:25 am)
Tanglish : kannimaikum
பார்வை : 102

மேலே