ஓஷோ சிந்தனைகள்

ஓஷோ சிந்தனைகள்
******************************
கடவுள்உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாத படி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்.
**********
முட்டாள்தனமானவர்கள் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்கள்.எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஜடமாகத் திரிவார்கள்.வாழ்வின் சிறப்பை வாழ்ந்து பார்க்க முயற்சிக்க மாட்டார்கள்.அவர்களிடம் தீவிரம் இருப்பதில்லை.இந்த சமூகம் நீ முட்டாளாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது.
**********
எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப் படுமுன் மும்முறை நினைத்துப்பார்.உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99% தேவையற்றதாகவே இருக்கும்.அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.
**********
வாழ்க்கை ஒரு புதிர்.ஏன் என்பதில்லை.குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை.அது அப்படியே இருக்கிறது.எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு.அது அங்கே இருக்கத்தான் செய்யும்.ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது ?எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?நடனமாடலாமே?பாடலாமே?அன்பு காட்டலாமே?தியானம் செய்யலாமே?வாழ்க்கை என்கிற அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப் போய்க் கொண்டிருக்கலாமே?
**********
இன்னொரு நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தை விடவா அந்த நரகம் மோசமாக இருக்கப் போகிறது?
**********

எழுதியவர் : பார்த்து சுவைத்தவை (20-Feb-15, 10:13 pm)
பார்வை : 278

மேலே