தொப்புளான் சாந்தகுமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தொப்புளான் சாந்தகுமார் |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 20-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 127 |
புள்ளி | : 25 |
வீழ ஒரு தளமின்றி தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் சிறு மழைத்துளி... நிர்பந்தத்தால் பொறியாளன்..
இதுதான் நம் கடைசி சந்திப்பு
என்று உணராத அந்த கடைசி சந்திப்பில் கூட
நாம் இருவரும் சிரித்ததாய் நினைவிலில்லை..
நீ பிரிந்து சென்ற கனம்கூட
எதையும் உணரவில்லை நான்..
இனி பார்க்கவே முடியாது என்று உணரும்போதுதான்
ரணமாய் வதைக்கிறது..
மரணம் ஒன்றும் அத்தனை ரணமாய்
இருக்கப்போவதில்லை என்று உணர்த்திவிடுகின்றன..
நேசித்த ஒருவரின் நிராகரிப்பிலும் விலகலிலும்
வாழும் ஒவ்வொரு நொடிகளும்..
மழைக்கால பின்னிரவு ஊதக்காற்றின் உந்துதலில்
ஈரத்தை சுமந்தபடி சலனமில்லாது மிதக்கும் சருகாய்
உன் தீரா நினைவுகளுடன் கடத்தி நகர்கிறேன்
ஒவ்வொரு தனிமை இரவையும்..
அத்தனையும் ஆனாலும்...
வாழ்வு அலுத்துப்போகு
சிக்னலில் தன்தாய்க்கு பிச்சை இடாதவனையும்
பார்த்து கையசைத்து சிரித்து டாட்டா காட்டும்
அந்தகுழந்தைக்கு முன் வீழ்ந்து விடுகிறது.!
மொத்தமனிதமும்...!!!
குளிர், பனி, நிலவு.,இரவு.,இதற்கு மட்டுமே
கவிதை புனையும் நம் மேலான எரிச்சல்தான் சூரியனின் இத்தனை சூடான கோபமா..!!??
பள்ளி நாட்களில் கோடையென்றால்
எப்பொழுதும் வெயில் தவிர்த்த ஈரம்தான்.! குற்றாலம்.,மாத்தூர் தொட்டிப்பாலம்,திற்பரப்பு., பேச்சிப்பாறை.,பாபநாசம்..!
உச்சிவெயிலில் பனையோலை விசிறி
இன்னும் விறகு பொருக்கும் இசக்கிஆச்சிக்கு வெய்யக்காலம் முகத்தில் கூடுதலாக ஒரு சுருக்கத்தை தரும் சாதாரண நிகழ்வு..!!
கோடையில் வற்றிய கம்மாயின் நடுவே காணும் துளிநீர் தேடும் ஒத்தை கருவேலம் எப்போதுமே நாங்கள் கிராமத்தில்தனியாய் விட்டுவந்த பாட்டியைய்த்தான் நினைவுபடுத்தும்..!
பால்யத்தில் கோடையில் கிராமங்க
அடித்து பிடித்து
பேருந்தில்
ஏறியதிலிருந்தே
வைத்த கண் வாங்காமல்
சொக்கிபோகிறாய் என்னழகில்...!!!
இது " லேடீஸ் சீட்" எனக்கூறி
சினிமா வில்லன் போல்
அமர்திருந்த ஒருவரை எழுப்பி
அவர் முறைப்பை வாங்கிகொண்டு
நான் அமர இடம் பிடித்தாய்...!!!
வயதான பெரியவருக்கு
உன் இருக்கையை
தருகிறாய்...!!!
படிக்கட்டில்
பயணிப்பவர்களை
மென்மையாக
எச்சரிக்கிறாய்....!!!
பெண்கள் நிற்க
இடம் ஒதுக்கி
தருகிறாய்
விரல் சூப்பும் குழந்தையின்
கட்டை விரலை
எடுதுவிடுகிறாய் .......!!!
இவற்றுகிடையே
அவ்வபொழுது
வேறு எங்கோ பார்த்தப
இதுவரை இருபத்துமூன்று
இலையுதிர் காலங்கள்
மட்டுமே கடந்திருக்கிறேன்.......
இருபத்து மூன்று
யுகமாக..............!
கோடை காலங்களெல்லாம்
கோடையாகவே........
கழிந்தன......!
கொஞ்சம் நிழல்
கேட்டு எந்த மரத்திடமும்
கெஞ்சியதில்லை........!
கடந்துவிட்ட இலையுதிர்காலங்களில்
உதிர்ந்துவிட்ட இலைகளை
குடும்ப அட்டைகளிளிருந்தும்
வாக்காளர் பட்டியலிலிருந்தும்
நீக்கி விட்டனர்.................!
அவற்றில் பல,
கற்பழிப்பில்
கொலையில்
படுகொலையில்
வன்முறையில்
தற்கொலையில்...........!
புதுப்பித்துக்கொண்ட
இலைகள்....
வசந்த காலத்தில்
வரவு வைக்கப்பட்டாலும்......
பின்னொரு இலையுதிர்
கால துர்
எப்போதும் போல்
இப்போதும்
ஒரு கூட்டம்
வந்து போயிற்று !
எதைச்சொல்லி
நிராகரிப்பதென்று
வந்த கூட்டமும்
எப்படியாவது
சம்மதம் வந்து விடாதாவென
இந்தக் கூட்டமும் !
கருப்பினை மாநிற மென்றும்
ஏழ்மையினை பாந்தமென்றும்
அடிமையாயிருக்க சம்மதமென்பதை
அனைத்து வேலைகளும்
தெரியுமென்றும்
ஆயிரம் பொய் சொல்லி
இந்த முறையாவது
நிச்சயமாகி
முழுக்கமிஷன்
கிடைத்து விடாதவென
தரகரும் !
இவர்களுக்கெல்லாம்
தெரியுமா ?
எனது தலையணை ...
எனது பட்டுப்புடவை ...
எனது கண்ணீர் ...
எனது வீட்டு தேநீர்கோப்பை
இவைகளுக்குள்
படமெடுத்துக் கிடக்கும்
இரவு நாகத்தின்
நிசப்த விஷம் ...
ஒவொரு முறை
பேச்
பக்கங்களே இல்லாமல்
பாகங்கள் மட்டும்
நீண்டு கொண்டே
போகிறது.........!
ஒரு அனாதையின்
வாழ்க்கை புத்தகம்.........!
ஆம்...!!
மரித்தலின் பொருட்டே ஜனித்தோம் நாம்,
வாழ்தலின் நம் இருப்பை உணர்விக்கத்தான் எத்தனை போராட்டம் ..!!
மறைவுக்கு பின்னான உன் இருப்பு ???
உணருங்கள் மறைவுக்கு பின்னும் வாழ்வுண்டு..
கண்டதும் காதல் என்பது இன்னும் விளங்கவில்லை அந்த குருடனுக்கு..!
பாவம் அவனுக்கு காதல் என்பது
காணுதலின் பார்வை மீது மட்டுமே..!!!
புதைக்காதீர்கள்., விதையுங்கள்...
உங்கள் கண்கள் காதலிக்கப்பழகட்டும்,
நீங்கள் இறந்த பின்னும்....
மற்றோருக்கு உறுப்புகள் விதைத்து
உயிர் கொடுத்தால் நீயும்
இறப்புக்கு பின் எழுந்த இயேசு பிரான்தான்...!!