கோடை வெயில்

குளிர், பனி, நிலவு.,இரவு.,இதற்கு மட்டுமே
கவிதை புனையும் நம் மேலான எரிச்சல்தான் சூரியனின் இத்தனை சூடான கோபமா..!!??

பள்ளி நாட்களில் கோடையென்றால்
எப்பொழுதும் வெயில் தவிர்த்த ஈரம்தான்.! குற்றாலம்.,மாத்தூர் தொட்டிப்பாலம்,திற்பரப்பு., பேச்சிப்பாறை.,பாபநாசம்..!

உச்சிவெயிலில் பனையோலை விசிறி
இன்னும் விறகு பொருக்கும் இசக்கிஆச்சிக்கு வெய்யக்காலம் முகத்தில் கூடுதலாக ஒரு சுருக்கத்தை தரும் சாதாரண நிகழ்வு..!!

கோடையில் வற்றிய கம்மாயின் நடுவே காணும் துளிநீர் தேடும் ஒத்தை கருவேலம் எப்போதுமே நாங்கள் கிராமத்தில்தனியாய் விட்டுவந்த பாட்டியைய்த்தான் நினைவுபடுத்தும்..!

பால்யத்தில் கோடையில் கிராமங்களின்
பாட்டியின் வீடுகள் வெயிலையும்.,சூடையும் உணரவே வாய்ப்பே தராமலிருந்தது.
எவ்ளவோ இருந்தும் இந்த பட்டணம்தான்.!!

வரும் ஒவ்வொரு கோடையும் கூடும் வெயிலின் உக்கிரம் நமக்கு சொல்வது ஒன்றேதான்.., வேண்டுமென்றே நாம் இப்போது நலமாய் வாழ வலிந்து அழித்த பசுமையின் இல்லாமையை.. !!!!

எழுதியவர் : தொப்புளான் (26-Mar-14, 3:55 pm)
Tanglish : kodai veyil
பார்வை : 986

மேலே