கருணை உள்ளம்
கால்கள் நடைபோட்டன .. நடந்தேன்
வழியெங்கும் நந்தவனம் ..
பூக்கள் வாசனை தூவியது .. சுவாசித்தேன்
வழியெங்கும் மலர் சயணம்...
தழுவியது தென்றல் ... உணர்ந்தேன்
வழியெங்கும் வனம் சிரித்து குலுங்கியது...
மெல்லிய வெளிச்சம் ... பார்த்தேன்
வானம் நாணத்தோடு மேக துணியால் தன்னை மூடியது...
சுரீர் ..... விடிந்து விட்டது
கோடை வெயில்....
வெரும்மேனியாய்... சூரியன்... சிரித்தான்
கனவுக்கு மட்டும் நல்ல கருணை உள்ளம் ..