நீயும் இயேசு பிரான்தான்

ஆம்...!!
மரித்தலின் பொருட்டே ஜனித்தோம் நாம்,
வாழ்தலின் நம் இருப்பை உணர்விக்கத்தான் எத்தனை போராட்டம் ..!!

மறைவுக்கு பின்னான உன் இருப்பு ???
உணருங்கள் மறைவுக்கு பின்னும் வாழ்வுண்டு..

கண்டதும் காதல் என்பது இன்னும் விளங்கவில்லை அந்த குருடனுக்கு..!
பாவம் அவனுக்கு காதல் என்பது
காணுதலின் பார்வை மீது மட்டுமே..!!!

புதைக்காதீர்கள்., விதையுங்கள்...
உங்கள் கண்கள் காதலிக்கப்பழகட்டும்,
நீங்கள் இறந்த பின்னும்....

மற்றோருக்கு உறுப்புகள் விதைத்து
உயிர் கொடுத்தால் நீயும்
இறப்புக்கு பின் எழுந்த இயேசு பிரான்தான்...!!

எழுதியவர் : தொப்புளான் சாந்தகுமார் (12-Mar-14, 7:15 pm)
பார்வை : 111

மேலே