23 இலையுதிர் காலங்கள்-வித்யா

இதுவரை இருபத்துமூன்று
இலையுதிர் காலங்கள்
மட்டுமே கடந்திருக்கிறேன்.......
இருபத்து மூன்று
யுகமாக..............!
கோடை காலங்களெல்லாம்
கோடையாகவே........
கழிந்தன......!
கொஞ்சம் நிழல்
கேட்டு எந்த மரத்திடமும்
கெஞ்சியதில்லை........!
கடந்துவிட்ட இலையுதிர்காலங்களில்
உதிர்ந்துவிட்ட இலைகளை
குடும்ப அட்டைகளிளிருந்தும்
வாக்காளர் பட்டியலிலிருந்தும்
நீக்கி விட்டனர்.................!
அவற்றில் பல,
கற்பழிப்பில்
கொலையில்
படுகொலையில்
வன்முறையில்
தற்கொலையில்...........!
புதுப்பித்துக்கொண்ட
இலைகள்....
வசந்த காலத்தில்
வரவு வைக்கப்பட்டாலும்......
பின்னொரு இலையுதிர்
கால துர்மரணத்திற்காக
முன் பதிவு செய்யப்பட்டதே........
இனி.......
நிழல் தேட மரம் இரா
கண்ணீர் தேடும்
புன்னகை இரா......
இதயம் தேடும்
காதல் இரா.......
பெண்மை தேடும்
ஆண்மை இரா.......
ஆண்மை தேடும்
பெண்மை இரா.......
தெரிந்தே தொலைத்து
கொண்டிருக்கிறோம்.......
தொலைத்துக்கொண்டே
தேடிக்கொண்டிருக்கிறோம்.......
போதும்.......
இனியும் இலையுதிர்
காலங்கள் வேண்டாம்...........
நிழல் வேண்டி
நிஜங்களிடம்
விலை போக வேண்டாம்............!
வசந்தகாலம்
வரவேற்போம்.......
கொஞ்சம் அன்பு
கொஞ்சம் அமைதி
கொஞ்சம் மனித நேயம்......
கெஞ்சுகிறேன்........
நிழல் தாருங்கள்............!
****************உலக அமைதி வேண்டி*************************