பெண்ணின் பாசம்
பெண்ணின் பாசம்
தங்கு தடையில்லாததுதான்
ஆனாலும்
பங்கு போடத்தெரியாது தெரியாது!
குழந்தையாய் இருக்கையிலே
பெற்றோர்மீது பாசம் !
அறிவு வளர்ந்ததும்
சகோதரர்கள்மீது பாசம்!
பருவமெய்தியதும்
நண்பர்கள்மீது பாசம்!
காதல் வசப்பட்டால்
காதலன்மீது பாசம் !
திருமணமானால்
கணவன்மீது பாசம் !
கருவுற்றதும்
குழந்தைமீது பாசம்!
மகனுக்கு திருமணமானதும்
மீண்டும்
கணவன்மீது பாசம் !
என்றும் பெண்ணிற்கு
பங்கு போட்டு பாசம் வைக்கத்தெரியாது!