நீயாகவே நீ இரு

ஒருவேளை
கஞ்சிக்கு
அல்லாடும்
அவலங்களை
கண்முன்னே
கண்டாலும்.....
பலவேளை
நாம்..... கிஞ்சித்தும்
கணக்கில்
எடுப்பதில்லை.....!!
மனிதன்
மனிதனிடம்
தோற்றுப்
போகிறான்...
மனித
நேயம்.....
மனித உரிமை
அமர்வில்
மட்டும்
பேசப் படும்
அளவு நேர
அறிக்கை
என்றாச்சு.....!!
கொள்ளைக்
கூட்டங்கள்
சேர்ந்து
கொள்ளை அடித்து
ஒன்றும்
இல்லை என்று
வெள்ளையடித்து
அறிக்கை தரும்....
பலத்த
ஏமாற்றம்
தரும்.....!!
ஊருக்குள்
திருடுபவனை
உள்ளே தள்ளும்
சட்டம்..... ஊரையே
திருடுபவனை
உத்தமன்
என்று உன்னையும்
என்னையும்
நம்ப வைக்குது.....!!
தெரிவிப்பது
யாராக
இருந்தாலும்
தீர்மானிப்பது
என்றும்
நீயாகவே
இரு.....!!!